உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், மே 15, 2012

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் துப்புரவுப் பணி

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சுகாதாரத்தை பேணிக்காக்கும் வகையில் மாபெரும் துப்புரவு பணி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

நெல்லிகுப்பம் நகராட்சியில் நடந்த துப்புரவுப் பணி முகாமை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தொடங்கிவைத்து பேசியது: 

மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் 683 ஊராட்சிகளில் மாபெரும் துப்புரவுப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இப்பணியில் துப்புரவுப் பணியாளர்கள் மட்டுமின்றி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். முதற்கட்டமாக திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் பணியின்போது தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரித்து, மக்கும் மற்றும் மக்காத குப்பை என தனித்தனியாக பிரிக்கப்படும்.

இரண்டாம் கட்டமாக 21-ம் தேதி முதல் 26-ம் தேதிவரை நடைபெறும் பணியின்போது, தமிழ்நாடு அரசு துப்புரவுப் பணி மற்றும் திடக்கழிவு மேலாண்மைக்காக அனைத்து நகராட்சிகளுக்கும் ஒருங்கிணைந்த நகர்புரம் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கருவிகளும், ஒவ்வொரு நகராட்சிக்கும் ரூ.18 லட்சம் மதிப்பில் டம்பர் பிளேசர் பின் 30, ரூ.15 லட்சம் மதிப்பில் டம்பர் பிளேசர் லாரி, ரூ.12 லட்சம் மதிப்பில் டிப்பர் லாரி, ரூ.5 லட்சம் செலவில் 33 தள்ளுவண்டிகளும் வழங்கப்பட உள்ளன. சேகரிக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு சாலை மற்றும் சிமென்ட் தொழிற்சாலை உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும்.
எனவே துப்புரவுப் பணிக்கு பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார். நகர்மன்றத் தலைவர் சுதாகர், ஆணையர் சுரேந்திரஷா, மக்கள் தொடர்பு அலுவலர் தமிழ்செல்வராஜன் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior