உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஜூன் 18, 2012

கடலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர்:

பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர ஆதிதிராவிட மாணவ, மாணவிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினரால் 36 மாணவர் விடுதிகளும், 23 மாணவியர் விடுதிகளும் இலவச உணவு, உறை விடத் துடன் கடலூர் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.இந்த விடுதிகளில் காலியாக உள்ள இட ங்களில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பப் படிவங்களை அருகில் உள்ள விடுதி காப்பாளர் அல்லது ஆதி திராவிடர் நல தனி தாசில்தார் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 22ம் தேதிக்குள்ளும், கல்லூரி, முதுகலை பட்டதாரி விடுதிகளில் சேர விரும்புவோர் 30ம் தேதிக்குள்ளும் விடுதி காப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். விடுதி வசதி கோருவோரின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விடுதிக்கும், வசிக்கும் இடத்திற்கும் குறைந்தபட்சம்5 கி.மீ., தூரம் இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இந்த தூர நிபந்தனை பொருந்தாது.

பள்ளி விடுதிகளில் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதுகலை பட்டதாரி, கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பல்கலைக் கழகத்தில் பயிலும்மாணவ, மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படுவர். ஒவ்வொரு ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் 5 இடங்கள் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior