உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வியாழன், ஜூன் 28, 2012

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

கடலூர்:

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:


   தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11, 12ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ., -ஐ.டி.சி., பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டபடிப்புகள், எம்.பில்., ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தம், சீக்கியர் மற்றும் பாரசீகிய மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2012-13ம் ஆண்டிற்கு கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


        இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவியரின் பெற்றோர் பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாணவ, மாணவியர் முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தல் வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை, இதர அரசு சார்ந்த துறைகள், நல வாரியங்கள் மூலம் 2012-13ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெறுதல் கூடாது.

         குடும்பத்தில் அதிக பட்சம் இருவருக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். மேல்நிலை பள்ளிக் கல்வி பயில்பவர்கள் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிமேற்படிப்பு கல்வி உதவித்தொகை (புதியது) புதுப்பித்தல் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான சான்றுகளுடன் கல்வி நிலையத்தில் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior