உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜூலை 20, 2012

கடலூரில் கடலூரில் மூலிகை தொழில் பயிற்சிக்கான அறிமுக நிகழ்ச்சி

கடலூர் :


மத்திய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பு சார்பில் மூலிகை தொழிற் பயிற்சி கடலூரில் வரும் 23ம் தேதி நடக்கிறது. மத்திய அரசின் பாரத் சேவக் சமாஜ் அமைப்பு சார்பில் மூலிகை தொழிற் பயிற்சி கடலூர் மஞ்சக்குப்பம்பிள்ளையார் கோவில்எதிரில் உள்ள சுசான்லி அக்குபஞ்சர் ஆயுர்வேத மருத்துவமனையில் மூன்று நாட்கள் நடக்கிறது.  இதற்கான அறிமுக நிகழ்ச்சி வரும் 23ம் தேதி கடலூரில்நடக்கிறது. இதில் மூலிகை தொழிற் பயிற்சி பற்றியும், தொழிலைப் பற்றிய விற்பனை  வாய்ப்புகள், வைத்தியத்திற்கான லைசன்ஸ் பெறும் முறைகள் குறித்து  விளக்கப்படும்.  இந்த அறிமுக நிகழ்ச்சி இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மூலிகை ஆர்வலர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க உள்ளவர்கள் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்பவர்களுக்குமட்டுமே அனுமதி வழங்கப்படும்.  முன்பதிவு செய்ய 93676 22251, 93676 22254 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என சுசான்லி குருப்ஸ் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior