நெய்வேலி :
ஐ.ஐ.டி.,க்கு தேர்வு பெற்ற நெய்வேலி ஜவகர் பள்ளி மாணவர்களை என்.எல்.சி., சேர்மன் பாராட்டி பரிசு வழங்கினார். நெய்வேலி தெலுங்கு சமிதியின் ஆதரவுடன் கடந்த 2005ம் ஆண்டு முதல் என்.எல்.சி., கட்டுப்பாட்டில் செயல்படும் ஜவகர் சி.பி. எஸ்.இ., மேல்நிலைப் பள்ளியில் ஐ.ஐ.டி., நிறுவனங்களில் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு ஒருங்கிணைந்த முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் டில்லி, விஜயவாடா, கோட்டா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் ஐ.ஐ.டி.,நுழைவுத் தேர்வு பயிற்சிக்கான நிபுணர்கள் பயிற்சி வழங்குகின்றனர். ஆண்டுதோறும் இப்பள்ளியிலிருந்து 15 முதல் 20 மாணவர்கள் ஐ.ஐ.டி.,யில் பயில இடம் பெறுகின்றனர். இந்த ஆண்டு 63 பேரில் 25 பேர்கள் ஐ.ஐ.டி.,க்கு தகுதி பெற்றனர். எஞ்சிய மாணவ, மாணவிகள் பிட்ஸ் பிலானி மற்றும் என். ஐ.டி., போன்ற நாட்டின் உயர்ந்த பிற கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளனர். இந்த சாதனை மாணவ, மாணவிகளுக்கு நெய்வேலி தெலுங்கு சமிதியில் பாராட்டு விழாநடந்தது. என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குனர் சரத்குமார் ஆச்சார்யா தலைமை தாங்கினார். சேர்மன் சுரேந்தர் மோகன் துணைவியார் சொர்ணகுமாரி, யோகமாயா ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். முதன்மை பொது மேலாளர் மற்றும் தெலுங்கு சமிதி தலைவர் வீரபிரசாத் வரவேற்றார்.
என்.எல்.சி., சேர்மன் சுரேந்தர் மோகன் பரிசு வழங்கிப் பேசுகையில்,
தமிழகத்தில் செயல்படும் கல்வி நிறுவனங்களில் அதிகபட்சமாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பராட்டுக்குரியதாகும் என்றார். ஏற்பாடுகளை தெலுங்கு சமிதி தலைமை நிர்வாகிகள் சுப்பாராவ், ரகுமான் உட்பட பலர் செய்திருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக