உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஜூலை 26, 2012

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்

கடலூர் :

வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக நெய்வேலி, சிதம்பரம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து வருமான வரித்துறை அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


வருமானவரித்துறை சார்பில் வரும் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை பொது மக்கள் தங்கள் வருமான வரி படிவங்களை தாக்கல் செய்வதற்காக சிறப்பு முகாம்  நடைபெறவுள்ளது.  நெய்வேலி வட்டம் 25ல் உள்ள விருந்தினர் மாளிகையிலும், சிதம்பரம் அண்ணாமலை  நகர், விருந்தினர் மாளிகை சென்ட்ரல் ஹாலிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். கடலூர் மற்றும் விழுப்புரம் வருமான வரி அலுவலகங்கள் வரும் 28, 29ம்  தேதிகளில் விடுமுறை நாட்களிலும் செயல்படும். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் வருமான வரி படிவங்களை தாக்கல்  செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior