உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 26, 2012

வயலில் பரண் அமைத்து ஆடு வளர்க்கும் எம்.பி.ஏ.பட்டதாரி

பெண்ணாடம் :


பெண்ணாடம் அருகே இளைஞர் ஒருவர் பரணி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார்.


 
பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் மகேந்திரன், பாரதிதாசன்
பல்கலையில் தொலைதூரக் கல்வி மூலம் வரும் இவர் தற்போது  தனது வயலில் பரண்அமைத்து ஆடு வளர்த்து வருகிறார்.


இது குறித்து மகேந்திரன் கூறியது:


பத்து சென்ட் இடத்தில் கூரை கொட்டகை போட்டு, 3 அடி உயரத்திற்கு மரப்பலகையால் பரண் அமைத்து அதில் மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், சேலம், வேப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து கொடி ஆடு,
தலைசேரி ஆடு, போயர் ஆடு, பல்லாடு உள்ளிட்ட பல்வேறு வகையான 50 ஆடுகளை  வளர்த்து வருகிறேன். ஆட்டிற்கு உணவளிக்க 2 ஏக்கர் பரப்பளவில் கோ-4, வேலி  மசால், குதிரை மசால் ஆகிய புல் வகைகளை பயிர் செய்து ஆடுகளுக்கு வழங்குகிறேன். ஆடுகள் பரண் மீது வளர்வதால் அதன் கழிவுகள் தரையில் விழும்படி  அமைத்துள்ளேன். மேலும், ஆடுகளை மோட்டார் தண்ணீரில் குளிப்பாட்டி விடுவேன்.  இதனால் ஆடுகள் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்கின்றன. ஆடுகள் மேய்ச்சலுக்குச் செல்லாமல் கொட்டகைக்குள்ளேயே வளர்வதால் ஆடுகளின்  எடை கூடி குறுகிய காலத்தில் பெரிதாக வளர்ச்சியடைகின்றன. இந்த ஆடுகளை மொத்தமாகவும், வளர்ப்பிற்கு சில்லரையாகவும் 2,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாய் வரை விற்கிறேன். ஆடுகளின் கழிவுகளை இயற்கை உரமாக சொந்த வயலில் பயன்படுத்துகிறேன். மீதமுள்ளவற்றை டன் 1,000 முதல் 1,500 ரூபாய் வரை  விற்பனை செய்கிறேன். இவ்வாறு அவர்கூறினார். இதனைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் பரணில் ஆடு வளர்க்க ஆயத்தமாகி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior