உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கடலூர் மாணவிகளுக்கு .25 ஆயிரம் ஊக்கத் தொகை

கடலூர்:


        அகில இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற கடலூர் தூய வளனார் கல்லூரி கால்பந்தாட்ட மாணவிகள் மற்றும் கபாடி வீரருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகை பெற்றனர். கடலூர் நகரில் தூய வளனார் அறிவியல் மற்றும் கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பயிலும் கால்பந்தாட்ட மாணவிகள், கபாடி வீரர்கள் இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.

        சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கில் அகில இந்திய அளவில் விளையாடிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா அண்மையில் நடந்தது. இவ்விழாவில், கடலூர் தூய வளனார் கால்பந்தாட்ட மாணவிகள் கே.தேன்மொழி, ஆர்.கண்ணாத்தாள், ஆர்.பத்மாவதி, எஸ்.சரண்யா, கே.இந்துமதி, வி.வினிதா, டி.சூர்யா, பி.மகாலட்சுமி, எஸ்.பிரதீபா ஆகியோருக்கும், கபாடி வீரர் எஸ்.மணிகண்டனுக்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலர் ஜி.ஏ.ராஜ்குமார், ரூ.25 ஆயிரம் ஊக்கத் தொகைக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் இ.இரட்சகர், திருவள்ளுவர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் முனைவர் அ.அமுல்தாஸ் ஆகியோர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பயிற்சி அளித்த கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஆர்.இராஜமாணிக்கம், எஸ்.மாரியப்பன் ஆகியோரை கல்லூரி செயலர் பாராட்டினார்.

 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior