உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஆகஸ்ட் 18, 2012

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் செல்போன் பறிமுதல்:

கடலூர்:


வண்டிப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலைபேசிகளை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மின் விளக்குகளை உடைத்து சேதப்படுத்தினர். கடலூர், வண்டிப்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 595 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். மாணவர்கள் பள்ளிக்கு அலைபேசி கொண்டு வருவதை தடுக்கவும்,மாணவர்களின் நடவடிக்கையை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தலைமையாசிரியர் தலைமையில் 10 பேர் கொண்ட ஓழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. இத்தகவலை தலைமையாசிரியர் சுந்தரமூர்த்தி
      
          நேற்று காலை இறை வணக்கத்தின் போது அறிவித்தார்.அதனைத் தொடர்ந்து ஒழுங்கு  நடவடிக்கை குழுவினர், மாணவர்கள் அலைபேசி வைத்துள்ளார்களா என சோதனை செய்து இரண்டு மாணவர்களிடம் அலைபேசிகளை பறிமுதல் செய்தனர். சற்று நேரத்தில் மாணவர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் இருந்த இரண்டு சோடியம் விளக்குகளை  கல்வீசி உடைத்தனர். உதவி தலைமையாசிரியர் கோமதி கொடுத்த தகவலின் பேரில், முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் பள்ளியில் விசாரணை  நடத்தினர்.

அப்போது ஆசிரியர்கள் கூறுகையில்,


மாணவர்கள் தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டிக்கும் ஆசிரியர்களுக்கு மிரட்டல்  விடுக்கின்றனர். வகுப்பறையில் உள்ள கரும்பலகையில் கட்சி பெயர், கட்சி  தலைவர்களின் பெயர்களை எழுதி வைக்கின்றனர் என புகார் கூறினர். மாணவர்களோ, ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சரியாக வருவதில்லை, பாடம் நடத்துவதில்லை என்றனர்.


சரியும் மாணவர் சதவீதம்

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு  ஆண்டிற்கு முன் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்தனர். மாணவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால் பல மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாறிவிட்டனர். இதனால் தற்போது இப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 595 ஆக குறைந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளி மீது தனிக்கவனம் செலுத்தி அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை  எடுக்க முன் வர வேண்டும்.

...

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior