உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஆகஸ்ட் 08, 2012

மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள்

கடலூர் :
 
கடலூர் மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலைத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.


இது குறித்து கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:


வரும் 2013ம் ஆண்டு அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வுப் பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., முதல் நிலை தேர்வு பயிற்சி மாணவர்களை தேர்வு  செய்வதற்காக வரும் அக்டோபர் 7ம் தேதி நுழைவுத் தேர்வு நடக்கிறது. அகில இந்திய குடிமைப்பணிகள் தேர்வு பயிற்சி மையத்தின் சார்பாக நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் கடலூரில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வரும் செப்டம்பர் 4ம் தேதி வரைவிண்ணப்பங்கள் வழங்கப்படும்.  பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 4ம் தேதி மாலை.5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் இதர பிரிவினர் எழுத்து மூலமாக மனுவை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு குறைந்த பட்ச கல்வி தகுதி, பி.ஏ.,பி.எஸ்சி., பி.காம்., மற்றும் தொழிற்பட்டப்படிப்பான பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி., (விவசாயம்), அங்கீகரிக்கப்பட்டபட்டப்படிப்புகள் படித்து  முடித்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் கல்வி, வயது, இருப் பிடம்ஆகிய சான்றிதழ்களுடன் நகல்களை சரிபார்த்த பின்னர் விண்ணப்பங்கள் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் 21 வயதிற்கு மேற்பட்டவராகவும், பொது பிரிவினர் 30  வயதிற்குள்ளாகவும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 33 வயதிற்கு மிகாமலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த பயிற்சி மையத்தில்தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior