உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அப்பல்லோ மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்பல்லோ மருத்துவமனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 10, 2012

மாரடைப்பு நோய்க்கு புதிய சிகிச்சை முறை

சிதம்பரம்:

மாரடைப்பு நோய்க்கு புதிய முறையில் சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சென்னை அப்பல்லோ மருத்துவமனை முதுநிலை இதயநோய் மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலுதெரிவித்தார்.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் இதயநோய் சிகிச்சை குறித்த சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. 

கருத்தரங்கில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் ஜி.செங்கோட்டுவேலு மாரடைப்புக்கு உயிர்காக்கும் புதிய சிகிச்சை முறையை அறிமுகம் செய்து வைத்துப் பேசியது:


தீவிர மாரடைப்பின்போது எம் கார்டு மற்றும் க்ளியர்வே கத்தீட்டர் ஆகிய கருவிகளைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் மருந்துகளை சீராக செலுத்தி ரத்தக் கட்டியை கரைத்து இதயத்துக்குள் ரத்தஓட்டத்தை சீராக்குகிறது. மாரடைப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் புதிய மருத்துவக் கருவிகளில் க்ளியர்வே கத்தீட்டர் என்பது ஒன்றாகும். அதன் முனையில் பொருத்தப்பட்டிருக்கும் பலூன் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு மருந்தை சீராக செலுத்தி ரத்தக்கட்டியை நீக்குகிறது. ÷பாரம்பரிய சிகிச்சை முறையில் ரத்தக்கட்டிகளை சிதறடிக்க கத்தீட்டர் மூலம் மருந்து செலுத்தப்படும். இது பாதிப்புள்ள பகுதிக்கு 20 சதவீத குறைவான அளவே மருந்து சென்றடையும்.


        ஆனால் புதிய கருவியான க்ளியர்வே கத்தீட்டர் பயன்படுத்துவதால் உயிர் சேதத்தை குறைக்க வசதியாக இருக்கும். ரத்தக்கட்டியை கட்டுப்படுத்துவதற்கான எம்கார்டு ஸ்டெண்ட் என்ற புதிய கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.÷பிரத்யோக மைக்ரான்- வலை தொழில்நுட்பத்தை கொண்டுள்ள எம்கார்டு, ரத்தக்கட்டிகளை சிக்க வைப்பதுடன், ரத்தநாளங்கள் நிவாரணமடைவதற்கு உதவுகிறது. தீவிர மாரடைப்புகள் இளம்வயதினில் குறிப்பாக புகைப்பழக்கம் உள்ளவர்களில் அதிகரித்து வருவதை காணமுடிகிறது. மார்புவலி ஏற்பட்டவுடன் மருத்துவமனைக்கு விரைந்து வருவதன் மூலம் இதய தசைகளை காப்பாற்றலாம். இந்த புதிய கருவிகளுடன் உகந்த சிகிச்சை துரிதமாக மேற்கொள்ளப்படுவதால் இதய தசைகள் பெருமளவில் சேதமடையாமல் காப்பாற்றப்பட்டு நோயாளி உயிர் பிழைக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என ஜி.செங்கோட்டுவேலு தெரிவித்தார்.
















Read more »

புதன், மார்ச் 03, 2010

உயிர்காக்கும் சிகிச்சை பற்றி டாக்டர், நர்சுகளுக்கு பயிற்சி

கடலூர் : 

                  டாக்டர்கள், நர்சுகளுக்கு அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. விபத்தினால் மயக்கமுற்றவர்களுக்கு செயற்கை சுவாசம், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை (சி.பி.ஆர்) குறித்து டாக்டர்கள், நர்சுகளுக்கு 2 நாள் பயிற்சி நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் துவங்கியது. இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யு., பிரிவு தலைமை மருத்துவர் ராம கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பயிற்சியளித்தனர்.



Read more »

செவ்வாய், மார்ச் 02, 2010

காலவரையற்ற விடுமுறை

சிதம்பரம்:
 
                       பல்கலைக்கழக விடுதிக்கு வெளியே தங்கியுள்ள குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட வடமாநில மாணவர்களால்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இதே மாணவர்களால்தான் பிரச்னை ஏற்பட்டது.​ ச ம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் விளக்கமளித்துள்ளார்.
 
அவர் மேலும் கூறியதாவது: 
 
                        விபத்தில் காயம் அடைந்த மாணவர் கௌதம்குமார் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அம்மாணவரின் நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ரத்தம் அதிகமாக வெளியேறி புதுச்சேரி அருகே அம்மாணவரின் உடல்நிலை மோசமானதால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அம்மாணவர் உயிர் இழந்தார்.​ அதைத் தொடர்ந்து,​​ அம்மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு 12.15 மணிக்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் என்னை சந்திக்க வந்துள்ளனர் என பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.​ அவர்களிடம் மாணவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் அறிக்கை பெற்று காலையில் பேசிக் கொள்ளலாம் எனக் கூறியதன் பேரில் மாணவர்கள் கலைந்துச் சென்றனர். அதன் பின்னர் மாணவர்கள் தேர்வுத் துறை கட்டடம்,​​ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள கண்ணாடி மற்றும் மின்விளக்குகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள கம்ப்யூட்டர்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.​ 
 
                               அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த போலீஸôர் மாணவர்களை ​ விரட்டியடித்துள்ளனர்.​ நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் பொறியியல் புலத்துக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டு விடுதிகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோட்டாட்சியர்,​​ வட்டாட்சியர் மூலமாக மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.​ இந்நிலையில் ஆற்றில் விழுந்து மாணவர் ஒருவர் இறந்துள்ளார்.​ இச்சம்பவம் துரதிஷ்டவசமானது.​ விடுதியில் தங்காமல் முத்தையா நகர்,​​ மாரியப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள வடமாநிலங்களைச் சேர்ந்த குறிப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட ​ மாணவர்கள்தான் இக்கலவரத்துக்கு காரணம் என தெரியவருகிறது.​ கடந்த ஆண்டும் அதே மாணவர்கள் இதுபோன்ற பிரச்னையில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டு அபராதம் செலுத்தியுள்ளனர்.​ ​ஹோலி பண்டிகைக்கு விடுமுறை வேண்டும் என்பதற்காக இதுபோன்ற சம்பவங்களில் குறிப்பிட்ட மாணவர்கள் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு முதல் ஹோலி பண்டிகைக்கு விடுமுறை அளிப்பது குறித்து முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் துணைவேந்தர் எம்.ராமநாதன்.

Read more »

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

சிதம்பரம் : 

                     "விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: 

                      விபத்தில் காயமடைந்த கவுதம்குமாருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு 400 மாணவர்கள், "மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச வேண்டும்' என, எனது பங்களா செக்யூரிட்டியிடம் கேட்டனர். "காலையில் பேசலாம்' என செக்யூரிட்டி கூறியதையடுத்து, சமாதானமாகி சென்று விட்டனர். மருத்துவக்கல்லூரி மருத்துவ அதிகாரி சண்முகத்திடம், சிகிச்சை குறித்து சான்று பெற்று, காலையில் மாணவர்களை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்திருந்தோம். இதற்கிடையே நிர்வாக அலுவலகம் நோக்கி சென்ற மாணவர்கள், தேர்வுத் துறை அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் கண்ணாடிகளையும், வாகனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை உடைத்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த போலீசார், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர் ஒருவர் பாலமான் ஓடையில் விழுந்து இறந்து விட்டதாக, உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். விடுதியை தவிர்த்து வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான், வேண்டுமென்றே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடந்த ஆண்டும், இதே போன்று பிரச்னை செய்தனர்; அவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
 
                   விடுதியில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு, போதுமான வசதி இல்லை. பெண்கள் அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், 60 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கக்கூடிய நிலை உள்ளது. புதிய விடுதி கட்டடம் கட்டப்படுவதால், அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் அனைவரும் தங்க வைக்கப்படுவர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு பகுதியிலும் பகுதி அதிகாரி நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் யார், வீடுகள், விடுதிகள் பற்றிய விவரங்கள், எங்கு செல்கின்றனர் என கண்காணிப்படும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior