உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மார்ச் 02, 2010

வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான் பிரச்னைக்கு காரணம்: துணைவேந்தர் விளக்கம்

சிதம்பரம் : 

                     "விபத்தில் காயமடைந்த மாணவருக்கு, அண்ணாமலை பல்கலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது; அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்' என துணைவேந்தர் ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: 

                      விபத்தில் காயமடைந்த கவுதம்குமாருக்கு, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால், புதுச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு இறந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நள்ளிரவு 12.15 மணிக்கு 400 மாணவர்கள், "மாணவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேச வேண்டும்' என, எனது பங்களா செக்யூரிட்டியிடம் கேட்டனர். "காலையில் பேசலாம்' என செக்யூரிட்டி கூறியதையடுத்து, சமாதானமாகி சென்று விட்டனர். மருத்துவக்கல்லூரி மருத்துவ அதிகாரி சண்முகத்திடம், சிகிச்சை குறித்து சான்று பெற்று, காலையில் மாணவர்களை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்திருந்தோம். இதற்கிடையே நிர்வாக அலுவலகம் நோக்கி சென்ற மாணவர்கள், தேர்வுத் துறை அலுவலகம் மற்றும் மருத்துவமனை கட்டடத்தின் கண்ணாடிகளையும், வாகனங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை உடைத்தனர். அப்போது ரோந்துப் பணியில் இருந்த போலீசார், மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மாணவர் ஒருவர் பாலமான் ஓடையில் விழுந்து இறந்து விட்டதாக, உடலை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார், விசாரித்து வருகின்றனர். விடுதியை தவிர்த்து வெளியில் தங்கியுள்ள சில மாணவர்கள் தான், வேண்டுமென்றே பிரச்னையை தூண்டி விடுகின்றனர். கடந்த ஆண்டும், இதே போன்று பிரச்னை செய்தனர்; அவர்கள் யார் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படும்.
 
                   விடுதியில் அனைத்து மாணவர்களும் தங்குவதற்கு, போதுமான வசதி இல்லை. பெண்கள் அனைவருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில், 60 சதவீத மாணவர்கள் மட்டுமே, தங்கக்கூடிய நிலை உள்ளது. புதிய விடுதி கட்டடம் கட்டப்படுவதால், அடுத்த ஆண்டு முதல், மாணவர்கள் அனைவரும் தங்க வைக்கப்படுவர். வெளியில் தங்கியுள்ள மாணவர்களை கண்காணிக்க, ஒவ்வொரு பகுதியிலும் பகுதி அதிகாரி நியமிக்கப்பட உள்ளனர். மாணவர்கள் தங்கியுள்ள வீட்டு உரிமையாளர்கள் யார், வீடுகள், விடுதிகள் பற்றிய விவரங்கள், எங்கு செல்கின்றனர் என கண்காணிப்படும். இவ்வாறு ராமநாதன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior