உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆதிமூலேஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆதிமூலேஸ்வரர் கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 05, 2011

பரங்கிப்பேட்டையில் ஆதிமூலேஸ்வரர் கோவில் தேர்: அதிகாரி அலட்சியத்தால் பாழ்

பரங்கிப்பேட்டை : 

            பரங்கிப்பேட்டை அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் சேதமடைந்த தேரை புனரமைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் அதிகாரிகள் அலட்சியத்தால் தேர் உருக்குலைந்து மக்கி மண்ணோடு மண்ணாகி வருகிறது. 

           பரங்கிப்பேட்டை அடுத்த அகரத்தில் பழமை வாய்ந்த அமிர்தவல்லி சமேத ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்குச் சொந்தமாக 100 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளது. நிலம் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் சூரிய பூஜை, மாசி மகத்தையொட்டி பத்து நாட்கள் திருவிழா, தை அமாவாசை, ஆடிப்பூர விழாக்கள் நடத்தப்படுகிறது.

            மாசிமக உற்சவத்தின் போது அமிர்தவல்லி மற்றும் ஆதிமூலேஸ்வரர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக தேரோட்டம் நடப்பது வழக்கம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இக்கோவிலில் இருந்த இரண்டு தேர்கள் சேதமடைந்ததால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே சேதமடைந்த தேரை சீர்செய்யக் கோரி அறநிலையத் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். 

           அதன்பேரில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தேரை சீர் செய்ய 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிதி ஒதுக்கி நான்கு ஆண்டுகள் ஆகியும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் அந்த நிதி தற்போது அரசுக்கு திரும்பிப்போகும் நிலை உள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தால் சீர் செய்யப்பட வேண்டிய தேர் உருக்குலைந்து மண்ணோடு, மண்ணாக மக்கி வருகிறது.




Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

 பரங்கிப்பேட்டை : 

              சிதம்பரம் அருகே ஆதிமூலேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
 
              சிதம்பரம் அடுத்த அகரம் மண்டப தெருவில் புகழ்பெற்ற ஆதிமூலேஸ்வரர் கோவில் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்து வருகிறது. சித்திரை மாதம் முதல் வாரத்தில் ஆதிமூலேஸ்வரர் மூலவர் மீது கோபுரம் வழியாக சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டு சித்திரை 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை ஆதிமூலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிப்பாடு, ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சித்திரை 1ம் தேதியில் இருந்து கோவில் எதிரே உள்ள கோபுரம் வழியாக சூரிய ஒளி மூலவர் மீது லேசாக பட்டு வந்தது. நேற்று சூரிய ஒளி மூலவர் மீது முழுவதும் விழுந்து அற்புத நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior