உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் ஒன்றியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 22, 2011

கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு 1வது வார்டில் அ.தி.மு.க.வேட்பாளர் அழகானந்தம்வெற்றி

கடலூர், :

          கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழு 1வது வார்டில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.

             கடலூர் மாவட்ட ஊராட்சிக்குழுவில் உள்ள 33 வார்டுகளுக்கு கடலூர் ஒன்றியத்தில் இடம் பெற்றுள்ள மூன்று வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19 பேர் போட்டியிட்டனர். 

         மொத்தம் பதிவான 38 ஆயிரத்து 921 ஓட்டுகளில் 2,543 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.  மீதமுள்ள 36 ஆயிரத்து 378 ஓட்டுகளில்  அ.தி.மு.க., அழகானந்தம் 14 ஆயிரத்து 645 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

மற்ற வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்:

 தே.மு.தி.க., 7,977, 
தி.மு.க., செல்வராஜ் 6,870,
வி.சி., ராம்குமார் 3,199, 
சுயேச்சை அருளானந்தம் 2,203, 
காங்., வரதன் 1,484 



ஓட்டுகள் பெற்றுள்ளனர். 










Read more »

வெள்ளி, ஜூன் 04, 2010

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் டெண்டர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகராறு

கடலூர் : 

                   கடலூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் சேர்மனின் கணவருக்கும் தகராறு ஏற்பட்டது. கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்த 150 ஆண்டுகால பழமை வாய்ந்த கட்டடம் கடந்த டிசம்பர் மாதம் இடிந்து விழுந்தது.புதிய அலுவலகம் கட் டுவதற்காக, பழைய கட்டடத்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதிலி ருந்த 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள தேக்கு மரத் தூண்கள், இரும்பு கம்பிகளை ஏலம் விட டெண்டர் நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது.

                நேர்முக உதவியாளர் தர்மசிவம் (வளர்ச்சி) தலைமை தாங்கினார். பி.டி.ஓ., பத்மநாபன் முன்னிலை வகித்தார். டெண்டர் போடுவதில் ஒன்றிய சேர்மன் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க., வினருக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதற்குள் பிற்பகல் 3 மணியானதால் டெண்டர் பெட்டியை பி.டி.ஓ., அறைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஒன்றிய சேர்மனின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று பி.டி.ஓ., விடம் வாக்குவாதம் செய் ததால் பரபரப்பு ஏற்பட்ட தால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Read more »

வியாழன், ஜூன் 03, 2010

மருதாடு ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்படுமா?

மருதாடு:

                    மருதாடு ஊராட்சி துவக்கப்பள்ளிக்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்காததால் ஒரே அறையில் ஐந்து வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

                       மத்திய அரசு கட்டாய கல்வியை சட்டமாக்கியதன் மூலம் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழக அரசும் இலவச கல்வி, சைக்கிள், பஸ் பாஸ் என பல்வேறு உதவிகளை வழங்கி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து பள்ளிகளுக்கும் தேவையான கட்டட வசதி செய்து தருகின்றனர். பள்ளிகளில் கட்டட பற்றாக்குறை என்பது குறைந்து வருகிறது. ஆனால் கடலூர் ஒன்றியம் மருதாடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கண்டு கொள்ள யாருமில்லை. இப்பள்ளியில் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஒரு தலைமையாசிரியரும், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு 800 சதுரடியில் ஒரே அறை மட்டுமே உள்ளது. மேலே ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் உள்ளே அனல் வீசுவதால் மாணவர்கள் படிக்க சிரமப்படுகின்றனர். ஆசிரியர்கள் இருவரும் இரண்டு வகுப்புகளுக்கு பாடம் நடத்தும் போது மற்ற மூன்று வகுப்பு மாணவர்களும் கூச்சல் போடுவதால் படிப்பு பாதிக்கப்படுகிறது. 

                         இப்பள்ளிக்கு கட்டடம் கட்ட விதிமுறைப் படி போதுமான இடவசதி இல்லையென காரணம் கூறி அனைவருக்கும் கல்வி திட்டத்தில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்க மறுக்கின்றனர். இருக்கும் கட்டடத்தை இடித்து விட்டு அங்கு புதிய கட்டடம் கட்டலாம். ஆனால் அதிகாரிகள் மனது வைப்பதில்லை. தற்போதுள்ள கட்டடம் முழுவதும் விரிசலாக காணப்படுகிறது. இடிந்து உயிரிழப்புகள் ஏற்படுவதற்குள் அதிகாரிகள் விழித்து கொள்ள வேண்டும். எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டடம் கட்ட நிதி ஒதுக்க அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அவர்கள் நிதி ஒதுக்க முன்வரவில்லை. இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior