உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சுயேட்சை வேட்பாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுயேட்சை வேட்பாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 14, 2011

விருத்தாசலத்தில் சுயேச்சை வேட்பாளர் கார் உடைப்பு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/86b64312-6334-4a28-95e0-d3ffaeb67fd1_S_secvpf.gif
 
விருத்தாசலம்:

         விருத்தாசலத்தில் நள்ளிரவில் சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்து நொறுக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.    விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகமது ஆசாத் (வயது 47). இவர் விருத்தாசலம் நகரசபை 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.    

            நேற்று இரவு இவர் வழக்கம் போல் வீட்டின் அருகே தனது காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அந்த காரை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது.  அந்த சத்தம் கேட்டு முகமது ஆசாத்தின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்விழித்து வீட்டு கதவை திறந்து வெளியே ஓடிவந்தனர். உடனே மர்ம கும்பல் தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றுவிட்டது.  

         இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

சனி, அக்டோபர் 01, 2011

பரங்கிப்பேட்டை தே.மு.தி.க., வேட்பாளர் மனு தள்ளுபடி

பரங்கிப்பேட்டை : 

            பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தாக்கல் செய்த தே.மு.தி.க., வேட்பாளரின் மனு தள்ளூபடி செய்யப்பட்டது

             .பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., மாரிமுத்து அவருக்கு மாற்று வேட்பாளராக சங்கர், தி.மு.க., முகமது யூனுஸ், தே.மு.தி.க., மோகன் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களாக ஜெகந்நாதன், முகமது சபியுல்லா, ஜெய்சங்கர், ஹசன்அலி உள்ளிட்ட 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை நேற்று நடந்தது.அதில் தே.மு.தி.க., வேட்பாளர் மோகன் கொடுத்த மனுவில் வாக்காளர் பட்டியலில் வேட்பாளர் தொடர் எண்ணும், முன்மொழிபவர் தொடர் எண்ணும் மாறியுள்ளதால் அவரது மனு தள்ளூபடி செய்யப்பட்டது.வார்டு கவுன்சிலர்களுக்கு போட்டியிட அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 102 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior