
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் நள்ளிரவில் சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்து நொறுக்கிய மர்ம கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் வசித்து வருபவர் முகமது ஆசாத் (வயது 47). இவர் விருத்தாசலம் நகரசபை 15 வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
நேற்று இரவு இவர் வழக்கம் போல் வீட்டின் அருகே தனது காரை நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் அந்த காரை உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியது. இதில் அந்த கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்தது. அந்த சத்தம் கேட்டு முகமது ஆசாத்தின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்விழித்து வீட்டு கதவை திறந்து வெளியே ஓடிவந்தனர். உடனே மர்ம கும்பல் தயாராக நின்ற மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றுவிட்டது.
இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சுயேச்சை வேட்பாளரின் காரை உடைத்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக