உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




தீயணைப்பு படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தீயணைப்பு படை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

கடலூர் தீயணைப்பு அலுவலகத்தில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நவீன கருவிகள்

கடலூர் : 

         கடலூர் தீயணைப்பு அலுவலகத்தில் தீயணைப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால மீட்பு ஊர்தி செயல்பாடுகள் குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் தீ விபத்து, சாலை விபத்து, சுனாமி, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவதற்கு வசதியாக அனைத்து உபகரணம் கொண்ட "அவசர கால மீட்டு ஊர்தியை' சென்னையில் இரண்டு நிலையங்கள் மற்றும் கடலூர், திருச்சி, சேலம், நாகை, மதுரை, கோவை உள்ளிட்ட எட்டு இடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தியில் 100க்கும் மேற்பட்ட கருவிகள் உள்ளன.

             இதில் முக்கியமாக விபத்தின் போது சிக்கியவர்களை மீட்க நவீன கட்டர் இயந்திரம், ஸ்பிட்டர், ஹைட்ராலிக் ஜாக்கி, 20 டன் எடையை தூக்கவல்ல ஏர் லிப்ட் பேக், புல்லிங் செயின், லிப்ட்டில் சிக்கிக் கொள்ளும் நபரை மீட்க உதவும் "டோர் பிரேக்கர்', அவசர கால ஆக்ஸிஜன் சிலிண்டர், 5 கே.வி., திறன் கொண்ட ஜெனரோட்டர் கருவி, அதிக எடைகளை இழுக்கும் சங்கிலி, உயர் மின் கோபுர விளக்கு உள்ளிட்ட பல்வேறு நவீன மீட்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. நேற்று முதல் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

              கடலூர் தீயணைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த அவசரகால மீட்பு ஊர்தியில் மீட்புக் கருவிகளை எப்படி கையாள்வது குறித்து பணியிடை பயிற்சியில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. கோட்ட தீயணைப்பு அதிகாரி குமாரசாமி தலைமை தாங்கினார், நிலைய அலுவலர்கள் கடலூர் குமார், குறிஞ்சிப்பாடி வெங்கடேசன், சிதம்பரம் வீரபாகு பங்கேற்றனர். மேலும் பயிற்சியில் பங்கேற்ற தீயணைப்பு வீரர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்து பரிசோதனை செய்யும் முகாம் நடந்தது. இதில் 100க்கு மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் செய்திருந்தார்.

Read more »

புதன், பிப்ரவரி 17, 2010

வாய்க்காலில் கவிழ்ந்தது டேங்கர் லாரி பண்ருட்டி அருகே கிளீனர் பலி; டிரைவர் காயம்

பண்ருட்டி : 

                     பண்ருட்டி அருகே கிளீனர் ஓட்டி வந்த டேங்கர் லாரி, வாய்க்காலில் கவிழ்ந் ததில் அவர் இறந்தார்.

                       புதுச்சேரியிலிருந்து நேற்று முன்தினம் இரவு, டேங்கர் லாரி ஒன்று, சோப் ஆயில் ஏற்றிக் கொண்டு கோவைக்கு புறப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டிரைவர் சந்திரன் (42) லாரியை ஓட்டி வந்தார். அவருடன் இளையான்குடி அடுத்த கருஞ் சித்தி ரஷீத்கான் (44) கிளீனராக இருந்தார். லாரி கடலூர் வந்ததும், கிளீனர் ரஷீத்கான் லாரியை ஓட்டி வந்தார். டிரைவர் சந்திரன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டு வந்தார்.இரவு 11.30 மணி அளவில் பண்ருட்டி திருவதிகை வளைவில் டேங்கர் லாரி வந்தபோது, எதிரில் கரும்பு டிராக்டர் வந்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த கிளீனர் ரஷீத்கான், லாரியை இடது பக்கமாக திருப்ப முயன்ற போது சாலையோரத்தில் உள்ள வாலாஜா வாய்க்காலில் லாரி தலைக்குப்புற கவிழ்ந் தது. பண்ருட்டி போலீசார், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரியை ஓட்டி வந்த கிளீனர் ரஷீத் கான் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். டிரைவர் சந்திரன் படுகாயமடைந் தார். அவரை போலீசார் மீட்டு பண்ருட்டி அரசு மருத் துவமனையில் சேர்த் தனர். கவிழ்ந்த டேங்கர் லாரி நேற்று காலை கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதனால், காலை 7 மணி முதல் 8 மணி வரை கடலூர்-பண் ருட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் பாலூர் வழியில் திருப்பி விடப்பட்டது.
பொறுப்பற்ற போலீஸ்

                     பண்ருட்டி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், போலீசாரிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக மீட்பு பணி தாமதமானது. நள்ளிரவில் நடந்த விபத்து பற்றி தகவலறிந்த பண்ருட்டி சப்- இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்தார். லாரியில் எழுதியிருந்த மொபைல் போன் எண் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டார். சற்று நேரத்தில் அவ்வழியே வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்து பகுதியை பார்வையிட்டனர். பணியில் இருந்த சப் -இன்ஸ்பெக்டர் தமக்கு இரவு பணி முடிந்துவிட்டதாக கூறி, ரோந்து போலீசாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கழன்று கொண்டார். "சாலை விபத்திற்கு தான் நாங்கள் பொறுப்பு. பள்ளத்தில் லாரி கவிழ்ந்துள்ளதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?' என புலம்பினர். போலீசாரின் போட்டியால் மீட்பு பணி தாமதமானது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior