உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

வாய்க்காலில் கவிழ்ந்தது டேங்கர் லாரி பண்ருட்டி அருகே கிளீனர் பலி; டிரைவர் காயம்

பண்ருட்டி : 

                     பண்ருட்டி அருகே கிளீனர் ஓட்டி வந்த டேங்கர் லாரி, வாய்க்காலில் கவிழ்ந் ததில் அவர் இறந்தார்.

                       புதுச்சேரியிலிருந்து நேற்று முன்தினம் இரவு, டேங்கர் லாரி ஒன்று, சோப் ஆயில் ஏற்றிக் கொண்டு கோவைக்கு புறப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி டிரைவர் சந்திரன் (42) லாரியை ஓட்டி வந்தார். அவருடன் இளையான்குடி அடுத்த கருஞ் சித்தி ரஷீத்கான் (44) கிளீனராக இருந்தார். லாரி கடலூர் வந்ததும், கிளீனர் ரஷீத்கான் லாரியை ஓட்டி வந்தார். டிரைவர் சந்திரன் அருகில் படுத்து தூங்கிக் கொண்டு வந்தார்.இரவு 11.30 மணி அளவில் பண்ருட்டி திருவதிகை வளைவில் டேங்கர் லாரி வந்தபோது, எதிரில் கரும்பு டிராக்டர் வந்துக் கொண்டிருந்தது. அதை பார்த்த கிளீனர் ரஷீத்கான், லாரியை இடது பக்கமாக திருப்ப முயன்ற போது சாலையோரத்தில் உள்ள வாலாஜா வாய்க்காலில் லாரி தலைக்குப்புற கவிழ்ந் தது. பண்ருட்டி போலீசார், தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், லாரியை ஓட்டி வந்த கிளீனர் ரஷீத் கான் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்தார். டிரைவர் சந்திரன் படுகாயமடைந் தார். அவரை போலீசார் மீட்டு பண்ருட்டி அரசு மருத் துவமனையில் சேர்த் தனர். கவிழ்ந்த டேங்கர் லாரி நேற்று காலை கிரேன் மூலம் மீட்கப்பட்டது. இதனால், காலை 7 மணி முதல் 8 மணி வரை கடலூர்-பண் ருட்டி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் பாலூர் வழியில் திருப்பி விடப்பட்டது.
பொறுப்பற்ற போலீஸ்

                     பண்ருட்டி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், போலீசாரிடையே ஏற்பட்ட போட்டி காரணமாக மீட்பு பணி தாமதமானது. நள்ளிரவில் நடந்த விபத்து பற்றி தகவலறிந்த பண்ருட்டி சப்- இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு வந்தார். லாரியில் எழுதியிருந்த மொபைல் போன் எண் உதவியுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டார். சற்று நேரத்தில் அவ்வழியே வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விபத்து பகுதியை பார்வையிட்டனர். பணியில் இருந்த சப் -இன்ஸ்பெக்டர் தமக்கு இரவு பணி முடிந்துவிட்டதாக கூறி, ரோந்து போலீசாரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு கழன்று கொண்டார். "சாலை விபத்திற்கு தான் நாங்கள் பொறுப்பு. பள்ளத்தில் லாரி கவிழ்ந்துள்ளதற்கு நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்?' என புலம்பினர். போலீசாரின் போட்டியால் மீட்பு பணி தாமதமானது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior