உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பண்ருட்டி ராமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்ருட்டி ராமச்சந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 24, 2011

பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு எதிராக காயத்திரி தேவி போட்டி

           எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பாமகவில் இணைந்தார். பாமக சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

         பின்னர் பாமக தலைமைக்கும், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அக்கட்சியில் இருந்து விலகியதுடன், அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்தார். அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அவர், கடந்த 2005ஆம் ஆண்டு தேமுதிக ஆரம்பிக்கப்பட்டபோது, அக்கட்சியின் அவை தலைவரானார். 2006 சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்ட அவர், பாமக வேட்பாளர் வேல்முருகனிடம் தோல்வி அடைந்தார்.
  
             இந்நிலையில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆலந்தூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் காயத்திரி தேவி போட்டியிடுகிறார். காயத்திரி தேவி மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

சனி, மார்ச் 12, 2011

பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் தே.மு.தி.க.வேட்பளாராக பண்ருட்டி ராமச்சந்திரன் போட்டி


பண்ருட்டி:
 
           அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்படும் என திட்டவட்டமாக தெரியவருகிறது.

             கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை தனியாக இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி சீரமைப்பின் காரணமாக பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டும், பண்ருட்டி தொகுதியில் இருந்த பெரும்பாலான கிராமங்கள் (கெடில நதிக்கு தெற்கே) புதிதாக உருவாகியுள்ள நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.

            ண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத், முன்னாள் மாவட்ட ஜெ.பேரவை செயலர் பி.பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் விபீஷ்ணன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் கோபு (எ) ரகுராமனும், கூட்டணி கட்சியில் உள்ள தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.சி.தாமோதரன், மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து, டாக்டர் அறிவொளி ஆகியோரும் விருப்பு மனு செய்துள்ளனர்.

               பண்ருட்டி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து ஆகியோர் முன்னுரிமை பட்டியலில் இருந்து வருகின்றனர்.இதில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு உறுதியாகிவிட்டதாக தேமுதிகவினர் தெரிவிக்கின்றனர்.

Read more »

செவ்வாய், டிசம்பர் 07, 2010

சிதம்பரம் பகுதியில் வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்

                                                             சிதம்பரம் பகுதியில்
 
 வெள்ளச்சேதங்களை விஜயகாந்த் பார்வையிட்டார்
 
சிதம்பரம்:

                கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய தாலுகா பகுதி முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக தே.மு.தி.மு.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் நேற்று சிதம்பரம் வந்தார்.

                  அவர் சிதம்பரம் பாலமான்கரை நேரு நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார். தொடர்ந்து நந்திமங்கலம், குமராட்சி, கீழவன்னியூர், திருநாரையூர், வீரநத்தம் ஆகிய பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களையும் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, ரொட்டி வழங்கினார்.

அவருடன் மாவட்ட செயலாளர் சசிக்குமார், மாநில பட்டதாரி ஆசிரியர் அணி துணை செயலாளர் ராஜமன்னன், முன்னாள் மாவட்ட செயலாளர் உமாநாத், நகர செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணை செயலாளர்கள் பாலு, முகமது அயூப், ஒன்றிய செயலாளர்கள் சீனு.சங்கர், ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

                      நேற்று இரவு 10 மணிக்கு விஜயகாந்த் நெய்வேலி வந்தார். நெய்வேலி புதுநகர் 16-வது வட்டத்தில் உள்ள ஓட்டலில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு புறப்பட்டு நெய்வேலி மந்தாரக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி, கங்கைகொண்டான், பாப்பனப்பட்டு வளையமா தேவி, உ.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

                    மாநில அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து, நகர செயலாளர் வெங்கடேசன், நகர தலைவர் மணிவண்ணன், வைத்திலிங்கம் உள்பட பலர் அவருடன் வந்திருந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior