பண்ருட்டி:
அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிகவுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்படும் என திட்டவட்டமாக தெரியவருகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தல் வரை தனியாக இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி சீரமைப்பின் காரணமாக பண்ருட்டி தொகுதியுடன் இணைக்கப்பட்டும், பண்ருட்டி தொகுதியில் இருந்த பெரும்பாலான கிராமங்கள் (கெடில நதிக்கு தெற்கே) புதிதாக உருவாகியுள்ள நெய்வேலி தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சார்பில் மாவட்டச் செயலர் எம்.சி.சம்பத், முன்னாள் மாவட்ட ஜெ.பேரவை செயலர் பி.பன்னீர்செல்வம், அண்ணாகிராமம் ஒன்றியச் செயலர் விபீஷ்ணன், மாவட்ட இலக்கிய அணிச் செயலர் கோபு (எ) ரகுராமனும், கூட்டணி கட்சியில் உள்ள தேமுதிக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்.சி.தாமோதரன், மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து, டாக்டர் அறிவொளி ஆகியோரும் விருப்பு மனு செய்துள்ளனர்.
பண்ருட்டி தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மாவட்டச் செயலர் சிவக்கொழுந்து ஆகியோர் முன்னுரிமை பட்டியலில் இருந்து வருகின்றனர்.இதில் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு போட்டியிட வாய்ப்பு உறுதியாகிவிட்டதாக தேமுதிகவினர் தெரிவிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக