உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதிய தமிழகம் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய தமிழகம் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஆகஸ்ட் 02, 2010

கடலூர் நகராட்சியை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு

கடலூர்:

             பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத் துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி கடலூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட புதிய தமிழகம் கட்சி முடிவு செய்துள்ளது.

            புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். கட்சியின் நிர்வாகிகளான இளையபெருமாள், சதாசிவம், பாஷா, வெற்றிவேலவன், சுதாகர், பாலமுருகன், ஜெகன், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியை கூட்டணியில் சேர்த்துக் கொண்ட அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

                கடலூர் அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி இல்லாததைக் கண்டித்து வரும் 18ம் தேதி மருத்துவமனை முன் குடிநீர் ஊற் றும் போராட்டம் நடத்துவது. கடலூரில் பாதாள சாக்கடைத் திட்டத்தை தாமதப்படுத்துவதைக் கண்டித்து வரும் 30ம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

திங்கள், ஜூலை 12, 2010

சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது: புதிய தமிழகம் கிருஷ்ணசாமி

கடலூர்:
 
            சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார். 
 
கடலூரில் சனிக்கிழமை  புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியது: 
 
                சிதம்பரம் நடராஜர் கோயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் தெற்கு வாயிலை திறக்க வேண்டும். திறக்காவிட்டால் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 2-ம் தேதி போராட்டம் நடத்துவோம். 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் வழங்கும் திட்டங்களை நிறைவேற்ற வில்லை. இலவசத் திட்டங்கள் தேர்தலுக்கு மட்டுமே பயன்படும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் திட்டத்தை தி.மு.க.வும் ஆதரிப்பது கண்டிக்கத்தக்கது.
 
             1984 முதல் மத்திய அரசின் உள்கூறுகள் திட்டத்தில் வழங்கிய நிதிகள் மூலம் மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டியவற்றைச் செய்ய வில்லை. அப்படி இருக்க சாதிவாரியாகக் கணக்கெடுத்து என்ன பயன் விளையப் போகிறது. சாதிவாரி கணக்கெடுப்பால் சாதிப் பிரிவினைகள், பாகுபாடுகள் மேலும் அதிகரிக்கும். ஒற்றுமையைக் குலைக்கும். எனவே தி.மு.க. தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.  மஞ்சக்குப்பம் அம்பேத்கர் சிலையைச் சுற்றி பூங்கா அமைக்க வேண்டும் என்று கோரி உழவர் சந்தை அருகில் இக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஆ.ஆதவன் தலைமை தாங்கினார்.

Read more »

திங்கள், ஏப்ரல் 19, 2010

ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை : புதிய தமிழகம் கட்சி முடிவு

 கடலூர் : 

              ஆதி திராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
 
                 புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலாளர் அமுதன் தலைமை தாங்கினார். தமிழர் சேனை மாவட்ட செயலாளர் பாஷா முன்னிலை வகித்தார். மாணவரணி மாவட்ட செயலாளர் வெற்றிவேலன் வரவேற்றார். நிர்வாகிகள் சுகுமார், மைனர், சதாசிவம், சுதாகர், தேவேந்திரன், வீரபாண்டி, பிரகாஷ், சிவக் கொழுந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
                       கூட்டத்தில், விபத்து ஏற்படுத்தும் டிரைவர்களின் உரிமத்தை ரத்து செய்வது என்ற உத்தரவை தமிழக அரசு திரும் பப் பெற வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும். கடலூர் தபால் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை சுற்றி மதில் சுவர் கட்டி, பூங்கா அமைக்காததைக் கண் டித்து கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் மே மாதம் 22ம் தேதி ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior