உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புவனகிரி தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புவனகிரி தொகுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூன் 15, 2010

தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

சேத்தியாத்தோப்பு : 

                  புவனகிரி தொகுதி தே.மு.தி.க., நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடந்தது. மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜா ஸ்டாலின், ராஜவன்னியன் முன்னிலை வகித்தனர். சேத்தியாத்தோப்பு நகர தே.மு.தி.க., செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். புவனகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் பாலு, பொரு ளாளர் சிவானந்தம், மகளிரணி செயலாளர் பொற் செல்வி, நகர செயலாளர்கள் மணிகண்டன், ஆனந்தன், நகர மகளிரணி செயலாளர் அஞ்சம்மாள், நிர்வாகிகள் கலியமூர்த்தி, செந்தில், பாலாஜி உட்பட பலர் பேசினர். நகர பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 30, 2010

சிதம்பரத்தை கைப்பற்றியது வாசன் அணி

சிதம்பரம் : 

                இளைஞர் காங்., தேர்தலில் சிதம்பரம் சட்டசபை தொகுதியை வாசன் அணியும், புவனகிரியை ப.சிதம்பரம் அணியும் கைப்பற்றியது. சிதம்பரம், புவனகிரி சட்டசபை தொகுதிகளுக்கான இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தல் சிதம்பரத்தில் நடந்தது. அதில் சிதம்பரம் தொகுதியில் வாசன் அணி சார்பில் போட்டியிட்ட ரஜினிகாந்த்தும், புவனகிரி தொகுதியில் ப.சிதம்பரம் அணியை சேர்ந்த மன்சூர் அலி வெற்றி பெற்றுள்ளனர்.

Read more »

சனி, மார்ச் 06, 2010

இளைஞர் காங்., தேர்தல் புவனகிரியில் 874 பேர் போட்டி

புவனகிரி : 

                   புவனகிரி தொகுதியில் இளைஞர் காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் 874 பேர் போட்டியிடுகின்றனர். புவனகிரி தொகுதி இளைஞர் காங்., நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட கடந்த 2ம் தேதி மனுக்கள் பெறப்பட்டது. அகில இந்திய இளைஞர் காங், தேர்தல் ஆணைய அலுவலர் அனூப் தலைமையில் புவனகிரி தொகுதி தேர்தல் அலுவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட குழுவினர் மனுக்ளை பெற்றனர். தேர்தலில் போட்டியிட  ஆயிரத்துக்கும் அதிகமானோர் மனுதாக்கல் செய்தனர். பரிசீலனை முடிந்து 874  பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 6ம் தேதியிலிருந்து 11ம் தேதி வரை சேத்தியாத்தோப்பு ஜே.கே. திருமணமண்டபத்தில் நடக்கிறது. புவனகிரி தொகுதி இளைஞர்காங்., நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தொகுதிக்குட்பட்ட  மேல்புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 152 கிராம ஊராட்சிகளில் இருந்து 882 மனுக்களும், புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கங்கைகொண்டான் ஆகிய 3 பேரூராட்சி பகுதிகளிலிருந்து 49 மனுக்களும் பெறப்பட்டுள்ளது. இதில் கிராம பஞ்சாயத்திற்கு தலா 5 நிர்வாகிகளும், பேரூராட்சி பகுதிக்கு தலா 10 புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Read more »

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு திரளாக பங்கேற்க முடிவு

சேத்தியாத்தோப்பு : 

                விழுப்புரத்தில் ஜெ., தலைமையில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பதென செயல் வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் சேத்தியாத்தோப்பு எஸ்.கே.எஸ். திருமண மண்டபத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சிவப் பிரகாசம் தலைமை தாங்கினார். புவனகிரி தொகுதி செயலாளர் கருப்பன், இணை செயலாளர் லட்சுமி நாராயணன், அவைத் தலைவர் காசி முன்னிலை வகித்தனர்.
 
         சேத்தியாத்தோப்பு நகர அ.தி.மு.க. செயலாளர் இளஞ்செழியன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன், புவனகிரி எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத்தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய பொருளாளர் ஜெயராமன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், முன்னாள் துணை செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகள் கிளி அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.  கூட்டத்தில் 13ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும்  ஜெ., தலைமையிலான போராட்டத்தில் புவனகிரி ஒன்றியத்திலிருந்து ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வது, வரும் 24ம் தேதி ஜெ., பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior