உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




பெரிய கங்கணாங்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரிய கங்கணாங்குப்பம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மார்ச் 03, 2011

கடலூரில் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரம்

கடலூர் : 

               கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். 

              வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 13.72 கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் பாலத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் இரு கரையோர பகுதிகளையும் 20 கி.மீ., தூரத்திற்கு பலம்படுத்தும் பணிகள் கடந்த மாதம் 2ம் தேதி முதல் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. 4 மீ., உயரத்திற்கும், மேல் தளம் 5 மீ., அகலத்திற்கும் கரைகள் பலப்படுத்தப்டுகிறது. இப்பணிக்காக கடலூர் அடுத்த விலங்கல்பட்டு, ராமாபுரம், தோட்டப்பட்டு பகுதிகளில் இருந்து செம்மண் லாரிகள் மூலம் கெடிலம் ஆற்று கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொக்லைன் மூலம் சீரமைக்கப்படுகிறது. 

                இப்பணிகள் 2012 ஜனவரி மாதம் முடிகிறது. அதேப்போன்று 9.73 கோடி ரூபாய் மதிப்பில் மேல்கங்கணாங்குப்பத்தில் இருந்து தாழங்குடா வரை பெண்ணையாற்றில் வலது பக்கத்தில் 2.6 கி.மீ., தூரத்திற்கும், சோனங்குப்பத்தில் இருந்து திருச்சோபுரம் வரை உப்பனாற்றின் இடது பக்கத்தில் 20.5 கி.மீ., தூரத்திற்கும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

Read more »

திங்கள், மே 03, 2010

மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி


கடலூர் : 

                 கடலூர் அடுத்த பெரியகங்கணாங்குப்பத்தில் வீடு மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான செயற்கைகோள் மூலம் மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

                கடலூர் நகராட்சி பகுதியில் உள்ள 45 வார்டுகளிலும் மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011க்கான பயிற்சி பெரியகங்கணாங்குப்பம் அனைவருக்கும் கல்வி இயக்க பயிற்சி கூடத்தில் வகுப்புகள் நடக்கிறது. முதல் இரண்டு கட்டமாக சென் னையிலிருந்து அளிக்கப்படும் பயிற்சியை பெரியகங்கணாங்குப்பத்தில் உள்ள பயிற்சி மையத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட செயற்கை கோள் ஒளிபரப்பு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாம் கட்ட பயிற்சிகள் சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் அளிக்கப்படுகிறது. இதில் திருவந்திபுரம் தலைமை ஆசிரியர் பழனி, திருப்பாதிரிப்புலியூர் அரசு பள்ளி முதுகலை ஆசிரியர் சசிகலா தேவி, சிங்காரவேல் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்புகளை நகராட்சி கமிஷனர் குமார் பார்வையிட்டார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior