உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மார்ச் 03, 2011

கடலூரில் ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணி தீவிரம்

கடலூர் : 

               கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். 

              வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 13.72 கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் பாலத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் இரு கரையோர பகுதிகளையும் 20 கி.மீ., தூரத்திற்கு பலம்படுத்தும் பணிகள் கடந்த மாதம் 2ம் தேதி முதல் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது. 4 மீ., உயரத்திற்கும், மேல் தளம் 5 மீ., அகலத்திற்கும் கரைகள் பலப்படுத்தப்டுகிறது. இப்பணிக்காக கடலூர் அடுத்த விலங்கல்பட்டு, ராமாபுரம், தோட்டப்பட்டு பகுதிகளில் இருந்து செம்மண் லாரிகள் மூலம் கெடிலம் ஆற்று கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொக்லைன் மூலம் சீரமைக்கப்படுகிறது. 

                இப்பணிகள் 2012 ஜனவரி மாதம் முடிகிறது. அதேப்போன்று 9.73 கோடி ரூபாய் மதிப்பில் மேல்கங்கணாங்குப்பத்தில் இருந்து தாழங்குடா வரை பெண்ணையாற்றில் வலது பக்கத்தில் 2.6 கி.மீ., தூரத்திற்கும், சோனங்குப்பத்தில் இருந்து திருச்சோபுரம் வரை உப்பனாற்றின் இடது பக்கத்தில் 20.5 கி.மீ., தூரத்திற்கும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior