உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




Passport Sevak Kendra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Passport Sevak Kendra லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 28, 2012

பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு புதிய வசதிகள்

தமிழ்நாட்டில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பாஸ்போர்ட் சேவா கேந்திரா) பாஸ்போர்ட்டை நிரப்ப வரும் பொதுமக்கள் ரூ.100 கட்டினால், அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பிக்கொடுக்கிறார்கள். பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்ப பாரங்களை நிரப்புவதற்கு சேவை வழங்குபவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ரூ.100 கட்டணம் செலுத்தினால் அவர்களே விண்ணப்ப பாரங்களை நிரப்பி, பாஸ்போர்ட் அதிகாரியிடம் நேர்முக பேட்டிக்கு நேரம் வாங்கி தரும் ஏற்பாடுகளையும் செய்து விடுவார்கள். இதன் மூலம் தரகர்கள் மற்றும் ஏஜெண்டுகள் இந்த பணியில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். தற்போது சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களிலும் பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வசதி ஜூலை மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

Read more »

வெள்ளி, டிசம்பர் 16, 2011

சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி

           வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிக்கும் வகையில் சென்னை பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு

             முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேரடியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வகையில் சென்னை சாலிகிராமம் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து சேவைகளையும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள்  இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்ப எண்ணை பெற்று அசல் சான்றிதழ்களுடன் சாலிகிராமம் பாஸ்போர்ட் சேவை மையத்தை அணுகலாம். இந்த புதிய சேவை இங்கு மட்டுமே செய்யப்பட்டு உள்ளது. அலுவலக வேலைநாட்களில் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

           இதேபோல், அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட்டுக்கு நேரடியாக விண்ணப்பிப்பதற்காக சிறப்பு வசதி ஏற்கனவே தாம்பரம் பாஸ்போர்ட் சேவை மையத்தில் ஏற்படுத்தப்பளட்டு உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள் தங்கள் வாழ்க்கை துணை, 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோருக்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். புதுப்பிக்கவும், தாம்பரம் துரைசாமி ரெட்டி சாலையில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் முன்பதிவு எதுவும் இல்லாமல் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

            பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வருவோர் காவல்துறை சான்று (பி.சி.சி.), இ.சி.என்.ஆர். மனைவி அல்லது கணவன் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம், திருமணத்திற்குப் பிறகு பெயர் சேர்ப்பு, கூடுதல் பக்கங்கள் இணைப்பு, 3 வயதுக்கு குறைவானவர்களுக்கு பாஸ்போர்ட்டு (பெற்றோர் முறையான இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்) ஆகிய சேவைகளுக்கு நேரடியாக அணுகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.














Read more »

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் அளிக்கும் முறை ரத்து

                  தபால் நிலையங்களில் வழங்கப்பட்டு வந்த பாஸ்போர்ட் சேவை, இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இம்முடிவுக்கு, பொதுமக்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

             பாஸ்போர்ட் விண்ணப்பங்களை தபால் நிலையங்களில் பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அங்கேயே செலுத்தும் வசதி நேற்று வரை இருந்தது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில், 50க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் இருந்து வந்த இந்த வசதி, கம்ப்யூட்டர், "இன்டர்நெட்' பரிச்சயம் இல்லாதவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. மேலும் இச்சேவையில், "ஆன்-லைனில்' பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்து விட்டு, குறிப்பிட்ட தேதியில் ஆவணங்கள் சரிபார்ப்புக்காக மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சென்று, நீண்ட வரிசையில் நாள் முழுவதும் தவம் இருக்க வேண்டியதில்லை. ஒரு பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு 20 ரூபாய், அதற்கான ஆவணங்கள் சரிபார்ப்புக்கு, ஒரு விண்ணப்பத்திற்கு குறிப்பிட்ட அளவு சேவை கட்டணம் என, மத்திய வெளியுறவு அமைச்சகம் மூலம் தபால் துறைக்கும், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வருவாய் வந்து கொண்டிருந்தது.

                தற்போது, தனியார் பங்களிப்புடன் சென்னை அமைந்தகரை, சாலிகிராமம், தாம்பரம் ஆகிய இடங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக, தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் அமோக வரவேற்பும், தபால் துறைக்கு வருவாயும் தந்து வந்த இச்சேவை, ரத்து செய்யப்பட்டது குறித்து, பொதுமக்கள் மற்றும் தபால் துறை அலுவலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை மத்திய தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியது: 

                  எங்கள் கோட்டத்தில், தி.நகர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில், அஞ்சலக பாஸ்போர்ட் சேவை வழங்கப்பட்டு வந்தது. இம்மூன்று தபால் நிலையங்களிலும், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, மொத்தம் 62 ஆயிரத்து 140 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 57 ஆயிரம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்களுடன், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

              இச்சேவை ரத்து செய்யப்பட்டது குறித்து, வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். தற்போது, "விண்ணப்பதாரரின் விருப்பத்தின் பெயரில், "ஆன்-லைனில்' பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் பணியை மட்டும், கணினிமயமாக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலகங்கள் மேற்கொள்ளலாம்' என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கு 100 ரூபாய் சேவை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி செந்தில் பாண்டியன்  கூறியது

               ""புதிய பாஸ்போர்ட் சேவை மையங்களில், கைவிரல் ரேகை பதிவு, புகைப்படம் எடுத்தல் போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் காரணமாகத் தான், தபால் நிலைய பாஸ்போர்ட் சேவை ரத்து செய்யப்படுகிறது. வருவாய் இழப்பை சரி செய்து கொள்ள, "ஆன்-லைனில்' விண்ணப்பங்களை பெறவும், விண்ணப்பங்கள் குறித்த தற்போதைய நிலவரம் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கவும், தபால் துறைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது,'' என்றார்.








Read more »

புதன், செப்டம்பர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பிப்போர் புதிய படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்

கடலூர்:

          பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்கள் வரும் 19ம் தேதி முதல் புதியதாக வடிவமைக்கப்பட்ட மனுவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
 
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் மையத்தில் 19ம் தேதி முதல் பாஸ்போர்ட் கோரி பெறப்படும் மனுக்கள் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் வருமாறு:

              புதியதாக வடிவமைக்கப்பட்ட படிவத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். புதிய விண்ணப்பப்படிவம் வெளிவிவகாரத் துறை அமைச்சக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

               மாவட்ட பாஸ்போர்ட் மையத்தில் 18 வயதுக்குட்பட்டவர் உட்பட அனைவருக்கும் புதிய பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பெறப்படும். விண்ணப்பத்தாரர்கள் புதிய படிவத்தில் பேனாவால் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். பழைய படிவத்தில் பூர்த்தி செய்து அளிக்கப்படும் மனுக்கள் பெறப்படமாட்டாது.விண்ணப்பக் கட்டணம் மண்டல கடவுச்சீட்டு அலுவலர், சென்னை என்ற முகவரியிட்டு சென்னையில் பெறத்தக்க வகையிலான வரைவு கேட்போலையாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.

                 பாஸ்போர்ட் மையத்தில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் நிலை குறித்து மண்டல பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் புதிய 15 இலக்க கோப்பு எண் விவரம் இளையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.மாவட்ட பாஸ்போர்ட் மையங்களில் 15ம் தேதி வரை மட்டுமே பழைய முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். 

இதர சேவை வேண்டுவோர் 

சாலிகிராமம், 
நெல்சன் மாணிக்கம் சாலை, 
தாம்பரம் 

பாஸ்போர்ட் மையங்கள்


No. 1, Bhanumathi Ramakrishna Road, Saligramam, Chennai






Navins Presidium, No. 103, Nelson Manickam Road, Aminjikarai, Chennai 


Claret Complex, Duraisamy Reddy Street, Tambaram, Chennai


ஆகிய பாஸ்போர்ட் மையங்களில் நேரடியாக சென்று விசாரித்துக் கொள்ளலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


MORE DETAILS






 Form Download 



 

Read more »

சனி, ஆகஸ்ட் 06, 2011

ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்

             கோவையில் பாஸ் போர்ட் சேவை கேந்திரா மையத்தின் துவக்கவிழா  நடந்தது, அதில் கலந்துகொண்டு  (பி.எஸ்.கே) மூலமாக விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெறமுடியும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.
           சாதாரண முறையில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம செய்பவர்களுக்கு, காவல்துறையின் விசாரணை சான்றிதல் கிடைத்த இரண்டு அல்லது மூன்று நாளில் பாஸ்போர்ட் அனுப்பபட்டு  விடும், அதிகபட்சம் ஒரு மாதத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். அதே நேரத்தில், ஆன்லைனில் தங்களது விண்ணப்ப பதிவு, விரல்ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் ஆகியவற்றை அனுப்புவத்தின் மூலம் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்.

             “தக்கல்” முறையில் விண்ணப்பம் செய்வபவர்களுக்கு, மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும், இந்த புதிய முறைக்கு எந்தவித கட்டண உயர்வும் கிடையாது. சாதாரண முறையில் பெற கட்டணம் 1000, ரூபாய் ஆகும், தக்கல் முறையில் பெற கட்டணம் 2500, ரூபாய் ஆகும்.

               உடனடியாக பாஸ்போர்ட் வாங்கித்தருகிறேன், கூடுதலாக பணம் கொடுங்கள்  என்று வரும் இடைத்தரகர்களை யாரும் நம்பி ஏமாறவேண்டாம், உங்களது சந்தேகங்களை 18002581800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 
www.passportindia.gov.in  என்ற இணைய தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.







Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

கோவையில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடக்கம்


கோவையில் புதிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பேசுகிறார், வெளியுறவுத்துறையின் பாஸ்போர்ட், விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோ


          சென்னையில் திட்டமிட்டபடி 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக, மத்திய வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோப்தி கூறினார். 

               கோவை, அவிநாசி சாலையில், லோட்டஸ் கண் மருத்துவமனையை அடுத்த ஏஜிடி எலக்ட்ரானிக்ஸ் நிறுவன வளாகத்தில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.  

இதன் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மத்திய வெளியுறவுத் துறையின் பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு இயக்குனர் ஏ.கே.சோப்தி பேசியது:  

                    நாட்டில் பாஸ்போர்ட் தொடர்பான சேவை பெற விண்ணப்பம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாஸ்போர்ட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்காக டிசிஎஸ் நிறுவன உதவியுடன் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் 77 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 2012-ல் முழுமையாக சேவா மையங்கள் தொடங்கப்பட்டு விடும்.  இப்போது புதிதாக பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறக்க மக்களிடம் இருந்து கோரிக்கை பெறப்பட்டு வருகிறது. 

              அதன் பின்னர் புதிய பாஸ்போர்ட் அலுவலகங்களைத் திறக்க பரிசீலிக்கப்படும்.  14 மினி மையங்கள்: நாடு முழுவதும் 14 சிறிய பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதில் வடகிழக்கு மாநிலங்களில் 8 மையங்களும், புதுச்சேரி அருகே ஒரு மையமும் ஏற்படுத்தப்பட உள்ளன.  பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2010-ல் மட்டும் பாஸ்போர்ட் சேவை கோரி 60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 

         அடுத்த 6 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியைத் தொடும் என்று எதிர்பார்க்கிறோம்.  தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளால் சென்னையில் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் அமைப்பதில் காலதாமதம் ஆவதாக வந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை. இதில் எந்த தொழில்நுட்பக் கோளாறும் இல்லை. திட்டமிட்டபடி, சென்னையில் மூன்று பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் தொடங்கப்படும். புதுதில்லியில் 2 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்கள் தொடங்கப்பட்ட பிறகு, சென்னையில் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.  

              போலி நபர்கள் பாஸ்போர்ட் பெறாமல் தடுக்கும் வகையில் கைவிரல் ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் எடுப்பது போன்ற புதிய முறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சேவை வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.  நாட்டின் 13-வது பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையம், ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட உள்ளது. மேலும் பாஸ்போர்ட் தொடர்பான தகவல்களை பாதுகாக்க, சிறந்த இணையப் பாதுகாப்பு முறைகள் அமல்படுத்தப்படும் என்றார். 

 கோவை மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் பேசுகையில்,

              "பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பழைய முறையின் கீழ் விரைவாக பாஸ்போர்ட் வழங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. எவ்விதத் தடங்கலும் இன்றி மக்களுக்கு பாஸ்போர்ட் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இந்த சேவை மையம் மூலம் மக்கள் நீண்ட வரிசையில் காத்திராமல் பாஸ்போர்ட் பெற முடியும்'' என்றார்.  

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் செந்தில்பாண்டியன் பேசுகையில், 

                 ""இந்த மையத்தின் மூலம் ஏதாவது சிறு பிரச்னை ஏற்பட்டாலும், உடனே தீர்வு காண வேண்டும். இதன்மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் மக்களுக்கு சிரமம் ஏற்படாது'' என்றார்.  மாநகர காவல் ஆணையாளர் அமரேஷ் புஜாரி, மேற்கு மண்டல ஐ.ஜி. வன்னியபெருமாள் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். 



 More Details  













Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior