உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஆகஸ்ட் 06, 2011

ஆன்லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்

             கோவையில் பாஸ் போர்ட் சேவை கேந்திரா மையத்தின் துவக்கவிழா  நடந்தது, அதில் கலந்துகொண்டு  (பி.எஸ்.கே) மூலமாக விண்ணப்பித்த ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் பெறமுடியும் என்று கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சசிகுமார் தெரிவித்தார்.
           சாதாரண முறையில் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பம செய்பவர்களுக்கு, காவல்துறையின் விசாரணை சான்றிதல் கிடைத்த இரண்டு அல்லது மூன்று நாளில் பாஸ்போர்ட் அனுப்பபட்டு  விடும், அதிகபட்சம் ஒரு மாதத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும். அதே நேரத்தில், ஆன்லைனில் தங்களது விண்ணப்ப பதிவு, விரல்ரேகை பதிவு, டிஜிட்டல் புகைப்படம் ஆகியவற்றை அனுப்புவத்தின் மூலம் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட் கிடைக்கும்.

             “தக்கல்” முறையில் விண்ணப்பம் செய்வபவர்களுக்கு, மூன்று நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடும், இந்த புதிய முறைக்கு எந்தவித கட்டண உயர்வும் கிடையாது. சாதாரண முறையில் பெற கட்டணம் 1000, ரூபாய் ஆகும், தக்கல் முறையில் பெற கட்டணம் 2500, ரூபாய் ஆகும்.

               உடனடியாக பாஸ்போர்ட் வாங்கித்தருகிறேன், கூடுதலாக பணம் கொடுங்கள்  என்று வரும் இடைத்தரகர்களை யாரும் நம்பி ஏமாறவேண்டாம், உங்களது சந்தேகங்களை 18002581800 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 
www.passportindia.gov.in  என்ற இணைய தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior