உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

தரமின்றி சாலை அமைக்கும் பணி பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்


ராமநத்தம் : 

                ராமநத்தம் அருகே தரமின்றி போடப்பட்ட சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
 
               மங்களூர் ஒன்றியம் மேலக்கல்பூண்டி- லட்சுமணபுரம் வரை உள்ள 5கி.மீ., சாலை நெடுஞ்சாலை துறை சார்பில் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. பழுதடைந்த சாலையை முற்றிலுமாக பெயர்த்து எடுத்து பின்னர் பெரிய ஜல்லியை கொட்டி சமப்படுத்தி, அதன் மீது சிறிய ஜல்லி கொண்டு சாலை அமைக்க வேண்டும். ஆனால் தற்போது சாலை அமைக்கும் பணியை கான்ட் ராக்ட் எடுத்தவர், பழைய சாலையை பெயர்க்காமல் அதன் மீது பெரிய ஜல்லியை கொட்டி சாலை அமைத்துள்ளனர். இதற்கு ஊற்றிய தாரும் அதிக அளவில் மண்ணெண்ணெய் கலந்திருந்ததால், சாலை தரமின்றி அமைக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக வடகராம்பூண்டி, கொரக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில் சாலை அமைத்த சில வாரங்களிலேயே ஜல்லிகள் பெயர்ந்துள்ளன. 

                       இதேபோன்று கொ.குடிகாடு -லட்சுமணபுரம் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டு ஆவேசமடைந்த கொ.குடிகாடு கிராம மக்கள் ரங்கராயர் தலைமையில் திரண்டு சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், கான்ட்ராக்டரை சந்தித்து பழைய சாலையை பெயர்த்து முறையாக சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Read more »

ரோட்டில் கிடந்த அதிர்வெடியால் சிதம்பரம் அருகே திடீர் பரபரப்பு

கிள்ளை :

               சிதம்பரம் அருகே வெடிக்காமல் கிடந்த அதிர் வெடியால் பரபரப்பு ஏற்பட்டது.

                      சிதம்பரம் அடுத்த கிள்ளை சாலையில் மண்டபம் சுடுகாடு எதிரில் குடியிருப்பு நிறைந்த சாலை ஓரத்தில் அரை கிலோ எடையுள்ள நாட்டு அதிர் வெடி (சணலால் செய்யப் பட்டது) கிடந்தது. அதை பார்த்த அப்பகுதியினர் நாட்டு வெடிகுண்டாக இருக்குமோ என அச்சம் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சிதம்பரம் டி.எஸ்.பி., மூவேந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அது அதிர் வெடி என்பதும், கடந்த 11ம் தேதி அப்பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்ததற்காக நடந்த இறுதி ஊர்வலத்தில் வெடிக்காமல் தூக்கி வீசப்பட்ட வெடி என தெரியவந்தது.

Read more »

பண்ணையில் தீ விபத்து

கடலூர் :

                 கடலூர் செம்மண்டலத்தில்  உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் கரும்பு ஆராயச்சி பண்ணையில் நடப்பட்டிருந்த சோதனை கரும்பு பயிர் நேற்று மதியம் 3.30 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் 15 ஆயிரம் ரூபாய்  மதிப்புள்ள கரும்புகள் எரிந்து சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior