உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 24, 2010

டி.புதுப்பாளையத்தில் டிரான்ஸ்பார்மர் பழுது பத்து நாட்களாக இருளில் மூழ்கியது கிராமம்

கடலூர் : 

             பழுதடைந்த டிரான்ஸ் பார்மரை சரி செய்யாததால் 10 நாட்களாக டி.புதுப்பாளையம் இருளில் மூழ்கியது.

                   கடலூர் அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த 10 நாட்களுக்கு முன் பழுதடைந்தது. இது குறித்து அருகில் உள்ள எஸ்.புதூர் மின் வாரிய அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரை சரிசெய்யப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி 10 நாட்களாக இருளில் மூழ்கியுள்ளது. மேலும் போர் வெல் இயக்க முடியாததால் குடிநீருக்கும் அல்லாடி வருகின்றனர். மாணவ, மாணவிகளும் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டதற்கு, 

                  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர் 2 நாட்களில் சரி செய்யப்பட்டது. பின்னர் திருவிழாவின் போது தெரு விளக்கு மற்றும் அலங்கார விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதால் அதிக மின்திறன் சுமை தாங்காமல் மீண்டும் பழுதடைந்தது. இதனால் அப்பகுதியில் 2 டிரான்ஸ்பார்மர்கள் வைக்க ஏற்பாடு செய்ததுடன் விரைவில் சரிசெய்து மின்சாரம் வழங்கப்படும்' என தெரிவித்தனர்.

Read more »

தமிழில் பெயர் பலகை கோரி பா.ம.க., ஆர்ப்பாட்டம்


சிதம்பரம் : 

              வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக் கோரி சிதம்பரத்தில் பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

                     சிதம்பரம் ஆர்.டி.ஒ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். மாநில விளம்பர அணி செயலாளர் வேணு புவனேஸ்வரன் வரவேற்றார். நகர தலைவர் தட்சணாமூர்த்தி முன்னிலை வகித்தார். தேவதாஸ் படையாண்டவர், மாவட்ட துணைத் தலைவர் அருள், திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் கள் பரமகுரு, செல்வக்குமார், இளையராஜா, குமார், கலையரசன், சரவணன் மற்றும் நகர பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். நகர செயலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.

Read more »

புதன், ஜூன் 23, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு துவங்கியது

  உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை "கொடிசியா' மைதானத்தில் இன்று கோலாகலமாக துவங்கியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் செம்மொழி மாநாட்டை துவக்கி வைத்தார்.  கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டு அரங்கம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குவிந்துள்ளனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior