உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 08, 2012

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.1.50 கோடி மதிப்பில்குழந்தைகள் மருத்துவமனை

கடலூர் :

        கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
 

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தினமும் வெளி நோயாளிகளாக 4,000 பேரும், உள்நோயாளிகளாக 600 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கென மருத்துவமனை புதியதாக அமைக்க நேஷனல் ரூரல் ஹெல்த் மானிட்டரிங் (என்.ஆர்.எச்.எம்.,) திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கட்டடப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.













Read more »

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு

கடலூர் :
 
       தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.
 
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
 
 
        தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் உடற்கல்வி ஆசிரியர், ஓவிய ஆசிரியர், தையல் ஆசிரியர், இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உள்ளது. மாநில உத்தேச பதிவு மூப்பு பட்டியல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மனுதாரர்கள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு மூப்பில் திருத்தம் அல்லது விடுபட்டு இருந்தால் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்வி சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை 10.2.2012க்குள் அணுக வேண்டும். 10ம் தேதிக்கு பின் வரும் கோரிக்கைகள் ஏற்கப்படமாட்டாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

Read more »

செவ்வாய், பிப்ரவரி 07, 2012

வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

கடலூர் :

      கடலூரில், தைப்பூச விழாவை முன்னிட்டு, ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்தி சமுதாய நலப் பேரவை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் விடுத்துள்ள அறிக்கை:


           காந்தி சமுதாய நலப்பேரவை சார்பில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளலாரின் போதனைகளை நினைவு கூறும் வகையில் வரும் 26ம் தேதி விழா நடத்தப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு "வடலூர் வள்ளலார்' என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் கவிதைப் போட்டி நடக்கிறது. இதேப் போன்று வள்ளலாரின் கனவுகளை படமாக வரைவது குறித்த ஓவியப் போட்டி, "வள்ளலாரின் நற்சிந்தனைகள்' (அல்லது) "மரணமிலாப் பெருவாழ்வு' என்ற தலைப்பில் குறைந்தது 2 பக்க அளவில் கட்டுரைப் போட்டி நடக்கிறது.

        "வள்ளலாரும் மனித நேயமும்' தலைப்பில் வரும் 26ம் தேதி நடக்கும் பத்து நிமிட பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் கடிதம் மூலம் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை வீட்டு முகவரியுடன் 
ராஜசேகரன், 
65/ஏ, கன்னிய கோவில் தெரு, 
மஞ்சக்குப்பம், 
கடலூர்-1 

என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior