கடலூர் :
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில், குழந்தைகள் மருத்துவமனை ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், தினமும் வெளி நோயாளிகளாக 4,000 பேரும், உள்நோயாளிகளாக 600 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் நோயாளிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தில், குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அவர்களுக்கென மருத்துவமனை புதியதாக அமைக்க நேஷனல் ரூரல் ஹெல்த் மானிட்டரிங் (என்.ஆர்.எச்.எம்.,) திட்டத்தின் கீழ் ஒன்றரை கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பிரேம்சந்தர், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவிப் பொறியாளர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில் கட்டடப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக