உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 23, 2012

விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி: முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை


விருத்தாசலம்:

விருத்தாசலத்தில் பெண்கள் கல்லூரி துவங்க வேண்டுமென முத்துகுமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டசபையில் முத்துகுமார் எம்.எல்.ஏ.பேசியது:

விருத்தாசலம் தொகுதியிலுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி படிப்புக்காக திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர். இங்குள்ள 65 சதவீதம் பெண்கள் படிக்கும் விருத்தாசலம் அரசு கல்லூரியில் 60 சதவீதம் பெண்கள் இடம் கிடைக்காமல் வெளியேறுகின்றனர். எனவே விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.பீங்கான் தொழில் நுட்ப கல்லூரியை சீரமைத்து, அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். செராமிக் தொழிற்சாலைகளின் வசதிக்காக அரசு நிதி மூலம் ஓர் கில்லன் (சுடு சூளை) கட்டடித் தர வேண்டும். பொம்மை தொழிலுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும்.தொகுதியிலுள்ள பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர், நவீன கழிவறை கட்டித் தரவேண்டும். அரசு கல்லூரி விளையாட்டு மைதானம் தரம் உயர்த்த வேண்டும். காணாதுகண்டான் கிராமத்திள்ள எரிசாராய ஆலை மற்றும் நல்லூர் ஒன்றியம் ஏ.சித்தூர் ஆரூர் சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீரை மாசு படிவதை தடுக்க வேண்டும்.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு முத்துகுமார் எம்.எல்.ஏ., பேசினார்.




Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்

கடலூர்:


கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொழுது போக்கு பொருட்காட்சியை எஸ்.பி., திறந்து வைத்தார். தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவங்கியது. எஸ்.பி., பகலவன் திறந்து வைத்தார். பொருட்காட்சியின் நிர்வாகி அப்பாஸ் உடனிருந்தார். பொருட்காட்சியில் நூறு அரங்கங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ ஜெயன்ட் வீல் ராட்டிணம், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், டோரா டோரா உள்ளிட்ட அனைத்து வகையான ராட்டிணங்களும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் தாவும் தவளை, கார்ட்டர் பில்லோ, பலூன், மினி ஜீப் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடக்கிறது. இதற்கான நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.















Read more »

சனி, ஏப்ரல் 21, 2012

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரதைச் சேர்ந்த பி.பாலாஜிகணேஷ் தேர்வு

சிதம்பரம்,:


      மிசீன வானொலி தழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரத்தைச் சேர்ந்த "ஜோக்' எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துணுக்கு எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் சீனாவிலிருந்து ஒலிபரப்பப்பாகும் சீன வானொலி தமிழ்ப் பிரிவில் சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சீன வானொலி தமிழ் பிரிவுக்கு அறிமுகம் செய்து வைத்த பி.நந்தகுமார் தலைவராக உள்ள திருப்பூர் மாவட்ட காங்கேயம் நேயர் மன்றம், சிறந்த நேயர் மன்றமாக தேர்வு பெற் றுள்ளது. சீன வானொலி சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள பி.பாலாஜிகணேஷ் தமிழ்ப் பத்திரிகைகள் அனைத்திலும் துணுக்கு எழுதிவரும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior