உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஏப்ரல் 23, 2012

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்

கடலூர்:


கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொழுது போக்கு பொருட்காட்சியை எஸ்.பி., திறந்து வைத்தார். தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவங்கியது. எஸ்.பி., பகலவன் திறந்து வைத்தார். பொருட்காட்சியின் நிர்வாகி அப்பாஸ் உடனிருந்தார். பொருட்காட்சியில் நூறு அரங்கங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ ஜெயன்ட் வீல் ராட்டிணம், கொலம்பஸ், பிரேக் டான்ஸ், டோரா டோரா உள்ளிட்ட அனைத்து வகையான ராட்டிணங்களும், சிறுவர்கள் விளையாடி மகிழும் வகையில் தாவும் தவளை, கார்ட்டர் பில்லோ, பலூன், மினி ஜீப் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளது.பொருட்காட்சி தினமும் மாலை 4 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடக்கிறது. இதற்கான நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior