விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் பெண்கள் கல்லூரி துவங்க வேண்டுமென முத்துகுமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் முத்துகுமார் எம்.எல்.ஏ.பேசியது:
விருத்தாசலம் தொகுதியிலுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி படிப்புக்காக திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர். இங்குள்ள 65 சதவீதம் பெண்கள் படிக்கும் விருத்தாசலம் அரசு கல்லூரியில் 60 சதவீதம் பெண்கள் இடம் கிடைக்காமல் வெளியேறுகின்றனர். எனவே விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.பீங்கான் தொழில் நுட்ப கல்லூரியை சீரமைத்து, அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். செராமிக் தொழிற்சாலைகளின் வசதிக்காக அரசு நிதி மூலம் ஓர் கில்லன் (சுடு சூளை) கட்டடித் தர வேண்டும். பொம்மை தொழிலுக்கு வங்கிக் கடன் வழங்க வேண்டும்.தொகுதியிலுள்ள பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர், நவீன கழிவறை கட்டித் தரவேண்டும். அரசு கல்லூரி விளையாட்டு மைதானம் தரம் உயர்த்த வேண்டும். காணாதுகண்டான் கிராமத்திள்ள எரிசாராய ஆலை மற்றும் நல்லூர் ஒன்றியம் ஏ.சித்தூர் ஆரூர் சர்க்கரை ஆலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீரை மாசு படிவதை தடுக்க வேண்டும்.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.இவ்வாறு முத்துகுமார் எம்.எல்.ஏ., பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக