உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 17, 2012

கடலூர் சில்வர் பீச்சில் மே 23 முதல் கோடை விழா

கடலூர்:

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் ஐந்து நாள்கள் கோடை விழா நடக்கவுள்ளது

.கடலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியது:

கடலூர் சில்வர் பீச்சில் வரும் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையில் கோடை விழா நடக்கவுள்ளது. 23-ம் தேதி மாலை நடக்கவுள்ள தொடக்க விழாவில், ஊரக தொழில் துறை மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர்கள் சிறப்பிக்க உள்ளனர். ஐந்து நாள்கள் நடக்கும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், பம்பை போன்ற கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இதேபோல் மேற்கு வங்காளம், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநில கிராம கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளது. பீச்வாலிபால், கபடி, பள்ளி, கல்லூரி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி மற்றும் பொழுதுப்போக்கு சாதனங்களும் இடம்பெறும். மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையில் பார்வையாளர்களுக்கான போட்டிகளும், அதற்கான பரிசளிப்பு விழாவும் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாக் குழு: விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளை கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்தார்.












Read more »

கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு 110 பேர் தேர்வு

கடலூர்:

 கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கடலூர், பண்ருட்டி (புதிய கம்பெனி), சேத்தியாதோப்பு, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு புதிய ஊர்காவல் படை வீரர்கள் சேர்ப்புக்காக இத்தேர்வு நடந்தது. 300 பேர் பங்கேற்ற முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவுகளை கொண்டு 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட ஊர்காவல் படை வட்டார தளபதி ஆர்.கேதார்நாத் தலைமை தாங்கினார். துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். ஆயுதப்படை ஆய்வாளர் ராமதாஸ் (பொறுப்பு), கோட்ட தளபதி ரவீந்திரநாதன் ஆகியோர் மேற்பார்வையில் ஆட்கள் சேர்ப்பு நடந்தது.











Read more »

புதன், மே 16, 2012

கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்



கடலூரில் மாணவர்களுக்கு கோடைகால கலை பயிற்சி முகாம்



கடலூர்:




கடலூரில் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் மற்றும் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் கோடை கால கலைப்பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.  விழாவிற்கு ஜவகர் சிறுவர் மன்ற தலைமை ஆசிரியர் வெங்கடேசு தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். இதில் வக்கீல் அருணாச்சலம் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக மாணவ- மாணவிகள் பாட்டு போட்டி, பரதநாட்டியம், சிலம்பு ஆட்டம், ஓவியம் போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஓவிய ஆசிரியர் மனோகரன் நன்றி கூறினார்.






Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior