உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், மே 17, 2012

கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு 110 பேர் தேர்வு

கடலூர்:

 கடலூர் மாவட்ட ஊர் காவல் படைக்கு ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் ஆயுதப் படை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கடலூர், பண்ருட்டி (புதிய கம்பெனி), சேத்தியாதோப்பு, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி பகுதிகளுக்கு புதிய ஊர்காவல் படை வீரர்கள் சேர்ப்புக்காக இத்தேர்வு நடந்தது. 300 பேர் பங்கேற்ற முகாமில் சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம், மார்பளவுகளை கொண்டு 110 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கடலூர் மாவட்ட ஊர்காவல் படை வட்டார தளபதி ஆர்.கேதார்நாத் தலைமை தாங்கினார். துணை வட்டார தளபதி ஜெயந்தி ரவிசந்திரன் முன்னிலை வகித்தார். ஆயுதப்படை ஆய்வாளர் ராமதாஸ் (பொறுப்பு), கோட்ட தளபதி ரவீந்திரநாதன் ஆகியோர் மேற்பார்வையில் ஆட்கள் சேர்ப்பு நடந்தது.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior