உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 03, 2009

அமிர்தகடேஸ்வரர் கோயிலில் தீபத்திருவிழா

டிச 02 , காட்டுமன்னார்கோவில்:
         
                   காட்டுமன்னார்கோவில் அருகே கீழக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நேற்று தீபத்திருவிழா நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அருகே மேலக்கடம்பூர். இங்கு மிகவும் பழமையான அமிர்தகடேஸ்வரர் கோயில் உள் ளது. ஒவ்வொரு பிரதோஷ காலங்களில் ஐம்பொன் சிலையான ரிஷப தாண்டவமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இக்கோயிலில் சனி பகவான் கழுகு வாகனத்தில் உள்ளார். குரு பகவான் மூன்று நிலையில் காணப்படுகிறார். தேர் வடிவில் கோயில் காணப்படுகிறது. இந்த சிறப்புகள் வாய்ந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Read more »

வி.சிறுத்தைகள் நிர்வாகிகள் நியமனம்

டிச 02 , நெல்லிக்குப்பம்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின் படி மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் அறிவுறுத்தலின்படி தமிழ்தேசிய விடுதலை பேரவையின் மாவட்ட துணை செயலாளர் விடுதலை புலியன் பரிந்துரையின் பேரில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒன்றியசெயலாளராக வரக்கால்பட்டு சுரேஷ், துணை செயலாளர்களாக  கீழ்குமாரமங்கலம் பாலமுருகன், பெரியகங்கணாங்குப்பம் வீரகுமார், பில்லாலி தொட்டி செல்வம், நத்தப்பட்டு கோபாலகிருஷ்ணன், கடலூர் நகர செயலாளராக வில்வ நகர் சுபாஷ், நெல்லிக்குப்பம் நகர செயலாளராக பெரிய சோழவல்லி விஜயன், பண்ருட்டி நகர செயலாளராக வினோத், துணை செயலாளராக சுரேஷ், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர்களாக மருவாய் காமராஜ், புலியூர் மகேந்திரன், பண்ருட்டி ஒன்றிய செயலாளராக பழனிவேல், துணை செயலாளர்களாக குமார், ஜவஹர்லால்நேரு, ஞானசேகரன் ஆகி யோரை தமிழ்தேசிய விடுதலை பேரவை மாவட்ட செயலாளர் அதிமான் நியமனம் செய்துள்ளார்

Read more »

புழுதி நகரமாகிறது விருத்தாசலம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


டிச 02 ,  விருத்தாசலம்,:

                 புழுதி நகரமாக மாறி வரும் விருத்தாசலத்தில் சீரமைப்பு நடவடிக்கை கள் மேற்கொள்ளவேண்டும் என நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


விருத்தாசலத்தில்  புகழ் பெற்ற விருத்தகிரீஸ்வரர், கொளஞ்சியப்பர் ஆகிய கோயில் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் என எப் பொதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நகரமாக விருத்தாசலம் உள்ளது.
இந்த நகரில் உள்ள 33 வார்டுகளில் சுமார் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரில் உள்ள அனைத்து சாலைகளின் ஓரங்களில் மண் மேடுகள் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லும் போது புழுதி பறந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.
         
தற்போது சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக சாலை கள் சேதமடைந்து  குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இந்த சாலையில் நெடுஞ்சாலை துறையினர் செம்மண் அடித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகவும் வெயில் காலங்களில் புழுதி ஏற் பட்டு, புழுதி நகரமாகவே விருத்தாசலம் மாறிவிட்டது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்வோர் நிலை மிகவும் பரிதாபமாக உள் ளது. புழுதியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நகரில் கழிவு நீர் கால்வாய்கள் சரி வர பராமரிக்கப்படாததால், முக்கிய இடங்களில் சாலையில் கழிவு நீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி குடிநீரில் கலந்து வாந்தி பேதி, மலேரியா, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தி வருகிறது.

           கழிவுநீரால் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் நகராட்சி குப்பைகள் அகற்றப்படாததால் குப்பைகள் குவியல், குவியலாக உள்ளது. இதில் பன்றிகள் குடித்தனம் நடத்தி நோயை பரப்பிவருகிறது.

நகரின் முக்கிய இடமான பேருந்து நிலையம், பாலக்கரை, கடை வீதி, ஜங்ஷன் ரோடு, கடலூர் ரோடு,  சிதம்பரம் ரோடு, பெண்ணாடம் ரோடு, சேலம் ரோடு ஆகிய இடங்களில் மின் விளக்குகள் சரி வர எரியாமல் இருண்டு உள்ளதால் பொது மக்கள் நடமாடவே பயப்படும் நிலை உள்ளது. முக்கிய இடங்களே இப்படி என்றால் புறநகர் பகுதிகள் சொல்லவே வேண்டாம். மின் விளக்குகள் சரி வர எரியாததால் நகரில் திருட்டு, சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து ஐந்தாம் தூண் அமைப்பின் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி கூறுகையில், நகராட்சி நிர்வாகம் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுத்து அழகான  சுகாதாரமான நகராக மாற்றவேண்டும் .
அடிப்படை வசதிகளை நிறைவேற்றகோரி இன்னும் சில தினங்களில் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.





Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior