உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜனவரி 27, 2010

இந்திரா நகரை தலைமையாக கொண்டு வருவாய் குறுவட்டம் உருவாக்க கோரிக்கை

கடலூர் :

                 நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்டு ஒரு புதிய வருவாய் குறுவட்டத்தை உருவாக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்., தலைவர் சந்திரசேகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

               கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ் சாவடி ஆகிய குறுவட் டத்தை கொண்ட 59 கிராமங்களுடன் குறிஞ்சிப் பாடி தாலுகா உதயமாகியுள்ளது. இதற்கு அமைச்சர் பன்னீர்செல்வத் திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

               குறிஞ்சிப்பாடி தாலுகாவில 59 கிராம நிர்வாகத்துடன் 75க்கும் மேற்பட்ட சிறு கிராமங்கள் இணைந்து 4 லட்சத்திற் கும் மேற்பட்ட மக்கள் தொகையும், 40 கி.மீட்டர் பரப்பளவும் உள்ள பகுதியாகும். தற்போது உள்ள குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி 2 வருவாய் குறுவட்டத்தை வைத்து மக்கள் பணி செய்வது சிரமம். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள், சான்றிதழ்கள் அவர்களை சென்றடைய காலதாமதமாகும். எனவே, நெய்வேலி இந்திரா நகர் பகுதியை மையமாக கொண்ட ஒரு புதிய குறுவட்டத்தை உருவாக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Read more »

மருத்துவ காப்பீட்டு திட்டம் புகைப்படம் எடுக்கும் பணி

விருத்தாசலம் :

                    விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் பணி சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் நடந்து வருகிறது.

இதுகுறித்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயலட்சுமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

                 விருத்தாசலம் தாலுகாவில் மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக் கும் பணி இரு கட்டமாக கிராமங்களில் நடந்தது.

                இதில் புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு ஜனவரி 20 ம் தேதி முதல் மூன்று மாதங்கள் வரை விருத்தாசலம் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கும் பணி நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்க தவறியவர்கள் புகைப்படம் எடுக்க வரும் போது ரேஷன் கார்டு, விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்ட அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை கொண்டு வர வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., விடம் இருந்து ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத் திற்கு குறைவானவர்கள் என்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more »

பக்தர்கள் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி

விருத்தாசலம் :

                        விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பாதயாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் மண்சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் இருந்து பக் தர்கள் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வார்கள். அவ்வாறு செல்லும் பக்தர்கள் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண்சோறு சாப்பிட்டு விரதத்தை முடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. டாக்டர் சேதுபதி அன் னதானத்தை தொடங்கி வைத்து ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங் கினார். நிகழ்ச்சியில் பாதயாத்திரை நலச்சங்க செயலாளர் ஜெயக்குமார், சங்க தலைவர் குசலவசாமி, நிர்வாகிகள் பெரியசாமி, சக்கரவர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior