உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, மார்ச் 28, 2010

காலாவதியான மருந்து விற்பனை எதிரொலி : சிதம்பரம் மருந்துகடை உரிமையாளர்கள் உஷார்

சிதம்பரம்:” 
 
                            காலாவதியான மருந்து விற்பனை பிரச்னை விஸ் வரூபம் எடுத்துள்ள நிலையில் சிதம்பரம் பகுதி மருந்து கடை உரிமையளர்கள் உஷார் அடைந் துள்ளனர். காலாவதியான மருந்துகள் விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மருந்து கடைகள், குடோன்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் காலாவதியான மருந்துகளை அழித்து வருகின்றனர். சிதம்பரம் பகுதியை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட மருந்து கடை  உரிமையாளர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது கடையில் உள்ள காலாவதியான மருந்துகளை உடனடியாக அழித்து விட வேண்டும். மருந்துகள் கொள்முதல் செய்யும்போது மருந்து காலக்கெடு தேதி, பேட்ஜ் எண் மற்றும் லாட் எண் போன்றவைகளை பார்த்து வாங்க வேண்டும். மருந்து கடைகளில் பதிவேடு கட்டாயமாக பராமரிக்க வேண்டும். டாக்டர்கள் கொடுக்கும் மருந்து சீட்டுகளை பதிவு செய்துகொள்ள வேண்டும். கூடுமானவரை டாக்டர்கள் பரிந்துரை இன்றி மருந்துகள் விற்க கூடாது. குறிப்பாக தூக்க மாத்திரை, மயக்க மாத்திரைகளை டாக்டர் பரிந்துரை இன்றி   தரக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகளை ஒவ்வொருவரும் கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படியே மருந்து கடைகளில் விற்பனையாகாமல் தேங்கியிருந்த காலாவதியான மருந்துகளை கண்டுபிடித்து எடுத்து அழித்து வருகின்றனர்.

Read more »

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியம் கேட்டு மனு

கடலூர்: 

                முன்னாள் கிராம நிர் வாக அலுவலர்கள் குறைந் தபட்ச ஓய்வூதியமாக ரூ.3500  வழங்க வேண்டும் என குறைகேட்பு கூட்டத் தல் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கடலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது.  கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். ஓய்வூதியர் துணை இயக்குனர் கண்ணப்பன், டி.ஆர். ஓ., அலுவலர் நடராஜன், கலெக்டரின் உதவியாளர் (கணக்கு) செல்வராஜ்  பங்கேற்றனர். 

கூட்டத்தில் கலெக்டர் சீத்தாராமன் பேசியதாவது:  

                             ஓய்வூதியர்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு பங் கேற்கும் அதிகாரிகள் தேவையான பதில்களை கொண்டு வர வேண்டும். அதே போன்று ஓய்வூதியர்கள் மேல் நடவடிக்கை மற்றும் பரிந்துரை செய்வதற்கான ஆதாரங்களையும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது கிராம நிர்வாக அலுவலர் கீழ்பூவாணிக்குப்பத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 

               தற்போது 1216 அளவிற்கே ஓய்வூதியம் பெற்று வருகிறோம். எங்களுடன் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 3500 பெற்று வருகின்றனர். எனவே அரசின் குறைந்த பட்ச ஓய்வூதியமாக 3500 வழங்க வேண்டும்   என குறிப்பிட்டிருந்தனர். கலெக்டர், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

Read more »

கம்ப்யூட்டர் பயிற்சி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்


சிதம்பரம்:

                              சிதம்பரத்தில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தமிழக அரசின் சார்பில் இலவச கம்ப்யூட்டர் மற் றும் வேலைவாய்ப்பு கல்வி படித்து வரும் சிதம் பரம் நகராட்சி பகுதியை சேர்ந்த வறுமை கோட் டிற்கு கீழ் உள்ள ஏழை மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு விழிப்புணர்வு விழா எல்.சி.சி., நிறுவன வளாகத்தில் சிதம்பரம் நகராட்சி மற்றும் ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட் டது. கமிஷனர் ஜான்சன் தலைமை தாங்கினார். ஏ.சி.டி., நிறுவன நிர்வாக இயக்குநர் தண்டபாணி முன்னிலை வகித்தார். அரிமா  முருகப்பன் வாழ்த்துரை வழங்கினார்.  நகராட்சி நிர்வாக செங்கல்பட்டு மண்டல சமுதாய அதிகாரி  சண்முகபிரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.   முகாமில், இலவச கல்வி பெறும் மாணவர்கள், பன்னாட்டு நிறுவன  வேலை வாய்ப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இலவச வேலைவாய்ப்பு பயிற்சி கையேடு வழங்கப்  பட்டது.  சிதம்பரம் நகராட்சி சார்பில் கல்வி பெறும் ஏழை மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம் நேரிடையாக  நடத் தும் ஆன்லைன் வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் தேர்வு மையத்தை சிதம்பரம் ஏ.சி.டி., நிறுவன வளாகத்தில் தமிழக ஒருங் கிணைப்பாளர் சுதாகர் துவக்கி வைத்தார்.   இந்த மையத்தின் ஏ.சி.டி., இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இலவச கல்வி பெறும் 598 மாணவர்களும் சென்னை மற் றும் பெரிய நகரில் உள்ள நிறுவனங்களில் சிதம்பரத்தில் இருந்தே வேலைக் கான நுழைவு தேர்வில் பங்கேற்று தேர்வு பெற்றனர். மணிகண்டன் நன்றி கூறினார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior