உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

இந்திய மக்கள்தொகை 2050-ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு


             உலக மக்கள்தொகை வரும் 2050-ம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

              இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும். இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050-ல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். 

                      ஆப்பிரிக்கக் கண்டத்தில் 2050-ல் மக்கள்தொகை 210 கோடியாக அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இப்போது 31 கோடியாக உள்ள அமெரிக்க மக்கள்தொகை, 2050-ல் 39.9 கோடி அல்லது 45.8 கோடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷியாவில் மக்கள்தொகை 2050-ல் குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

Read more »

நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஓய்வு



             தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உள்பட 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.  வேளாண் துறைச் செயலாளர் நந்த கிஷோர், மத்திய அரசுப் பணியில் உள்ள சாந்தா ஷீலா நாயர், தொழில் மற்றும் வர்த்தத் துறை ஆணையர் ஜி.சுந்தரமூர்த்தி ஆகியோர் ஓய்வு பெறவுள்ள மற்ற அதிகாரிகளாவர்.
 
தேர்தல் அதிகாரி: 
 
               ஓய்வு பெறும் அதிகாரிகளில் நரேஷ் குப்தா குறிப்பிடத்தக்கவர். தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து திறம்பட பணியாற்றிய பெருமைக்குரியவர். அவரது பணிக் காலத்தில் 10-க்கும் மேற்பட்ட இடைத் தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். முதல்வர் உள்பட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் கண்டனக் கணைகளுக்கு ஆளானாலும் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வந்தவர். 
 
தேர்தலில் புதிய யுக்திகள்: 
 
                      வாக்குப் பதிவின் போது பல்வேறு புதிய யுக்திகளை தமிழகத்தில் புகுத்தியவர் நரேஷ் குப்தா.  வாக்குப் பதிவின் போது நடைபெறும் நிகழ்வுகளை வெப்கேமராவில் படம் பிடிப்பது, வாக்காளிக்க வருவோரை படமெடுத்து அதை வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச் சாவடி அதிகாரிகள் மணிக்கு ஒருமுறை தெரிவிக்கச் செய்வது போன்

Read more »

வெப் கேமரா புகைப்படம், கைரேகைகள் மூலம் பத்திரப் பதிவு


சென்னை மயிலாப்பூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கான புதிய முறையை வியாழக்கிழமை தொடங்கி வைக்கிறார் அந்தத் துறையின் அமைச்சர் சுரேஷ் ராஜன்
 
                 வெப் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் கைரேகைகளைப் பயன்படுத்தி பத்திரப் பதிவு செய்யும் புதிய முறை, சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. 
 
              இதை, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 574 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களை கணினிமயமாக்கும் பணிகள் நிறைவுப் பெற்றுள்ளன. இதன்மூலம், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துகளின் பரிமாற்ற விவரங்களுக்கு எந்தவொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் வில்லங்கச் சான்று பெற்றுக் கொள்ள முடியும். வெப் கேமரா மற்றும் பயோ மெட்ரிக்: பத்திரப்பதிவில் முதன்முறையாக வெப் கேமரா,  மின்னணு ரேகைப் பதிவு (பயோமெட்ரிக்) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 250 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. புதிய திட்டத்தின் தொடக்க விழா, சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனை அமைச்சர் சுரேஷ் ராஜன் தொடங்கி வைத்தார்.
 
சிறப்பு அம்சங்கள்: 
 
            புகைப்படம், கைரேகைகள் மின்னணு கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதனால், ஆவணப் பதிவின் போதுள்ள விண்ணப்பதாரர்களின் தெளிவான படங்கள் ஆதாரமாக சேகரிக்கப்படுகிறது.  ஆவணப்பதிவின்போதே மின்னணு கருவிகளால் புகைப்படம், கைரேகைகள் பதிவு செய்யப்படுவதால் மனிதத் தவறுகள் தடுக்கப்படும். போலி ஆவணப்பதிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளும் குறைக்கப்படும்.  மின்னணு முறையில் கைரேகைப் பதிவுகள் சேமிக்கப்படுவதால் இதனை தடவியல் போன்ற பிற துறைகளுக்கு எளிதில் அனுப்பி ஒப்பீடு செய்து சரிபார்க்கலாம்.  
 
                புகைப்படம் மற்றும் கைரேகைப் பதிவுகள் மின்னணு முறையில் சேகரிக்கப்படுவதால் அதன் தரம் குறையாமல் திரும்பப் பெற்று சரிபார்க்கவும், தேவை ஏற்படின் சட்டத்துக்கு உட்பட்டு மீண்டும் பயன்படுத்திக் கொள்ளவும் வழி ஏற்படும்.  ஒரு நபர் பல ஆவணங்களைத் தாக்கல் செய்யும் அல்லது எழுதிக் கொடுக்கும் சமயங்களில் ஒவ்வொரு ஆவணத்துக்கும் புகைப்படம் எடுத்து ஒட்டும் இப்போதைய நடைமுறைக்குப் மாற்று ஏற்படாக புதிய முறை செயல்படுத்தப்படும். மேலும், மக்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கான செலவு மற்றும் கால விரயம் குறையும்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior