உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூலை 30, 2010

இந்திய மக்கள்தொகை 2050-ல் 170 கோடியாகும்: அமெரிக்க ஆய்வு அமைப்பு


             உலக மக்கள்தொகை வரும் 2050-ம் ஆண்டில் 940 கோடியைத் தொட்டுவிடும். அப்போது இந்தியாவின் மக்கள்தொகை 170 கோடியாக அதிகரிக்கும் என அமெரிக்க மக்கள்தொகை ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. 

              இப்போது உலக மக்கள்தொகை 680 கோடியாக உள்ளது. 2025-ம் ஆண்டுவாக்கில் இந்த எண்ணிக்கை 800 கோடியைத் தொட்டுவிடும். உலக மக்கள்தொகையில் சீனா 130 கோடியுடன் முதலிடத்தை வகிக்கிறது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 120 கோடியாகும். இதே விகிதத்தில் மக்கள்தொகை வளர்ச்சி இருக்குமானால் 2050-ல் உலக மக்கள்தொகை 940 கோடியாக அதிகரிக்கும். இதில் ஆசியக் கண்டத்தில் மட்டும் மக்கள்தொகை 550 கோடியாக இருக்கும். இந்திய, சீன நாடுகளின் மக்கள்தொகை பெருக்கத்தைப் பொருத்து இந்த எண்ணிக்கை மாறுபடலாம். 

                      ஆப்பிரிக்கக் கண்டத்தில் 2050-ல் மக்கள்தொகை 210 கோடியாக அதிகரிக்கும். அமெரிக்காவிலும் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இப்போது 31 கோடியாக உள்ள அமெரிக்க மக்கள்தொகை, 2050-ல் 39.9 கோடி அல்லது 45.8 கோடி அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் ரஷியாவில் மக்கள்தொகை 2050-ல் குறையக் கூடும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior