உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

அஞ்சல் துறையில் 615 காலியிடங்களுக்கு அக்.14-ல் தேர்வு

              அஞ்சல் துறையில் உள்ள 615 காலியிடங்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.  தமிழக அஞ்சல் வட்டாரத்தில், அஞ்சல் உதவியாளர், கடிதங்களை பிரிக்கும் உதவியாளர் ஆகிய பணிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு நேரடியாக ஆள்தேர்வு செய்யப்படவுள்ளது.
 
இது குறித்து தமிழக வட்டத்தின் தலைமை போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கை:
 
              விண்ணப்பங்கள், தகவல் கையேடு மற்றும் காலியிட விவரங்கள் ஆகிவவை தமிழக அஞ்சல் வட்டாரத்துக்குட்பட்ட அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இதன் விலை ரூ. 25 ஆகும்.  ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கப்படும் பணியிடத்தின் பெயரை அதற்கான விண்ணப்பம் அடங்கிய அஞ்சல் உறை மீது தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 

            அஞ்சல் துறையின் இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவம், தகவல் கையேடு மற்றும் காலி பணியிட விவர அட்டவணை ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை எந்த அஞ்சல் அலுவலகத்தில் யூ.சி.ஆர். முறையில் செலுத்தலாம். கட்டணத்துக்கு தரப்படும் ரசீதை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.   இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, யூ.சி.ஆர். ரசீது இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் முன்னாள் ராணுவத்தினர் இணையதளத்தில் உள்ள தனி விண்ணப்பப்படிவத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
 
                    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களுடன் அக்டோபர் 5-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை பதிவுத் தபால் அல்லது விரைவுத் தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும். மற்ற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். கடைசி தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதுடன் அது தொடர்பான எந்த கடித போக்குவரத்தும் ஏற்கப்படமாட்டாது.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுனாமியில் தாய், தந்தை இழந்த 8 பேருக்கு தலா ரூ.51 ஆயிரம்

டலூர்:
 
         சுனாமியில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குள்பட்ட 8 பேருக்கு, தலா ரூ.51 ஆயிரம் வீதம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.

           பாரதப் பிரதமரின் தேசிய குழந்தைகள் நலஉதவித் திட்டத்தில் இத் தொகை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இத் தொகை குழந்தைகள் பெயரில் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, பாதுகாவலரையும் நியமனம் செய்து, வட்டித் தொகையில் இருந்து, 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

                மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 61 நபர்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Read more »

என்.எல்.சி. புதிய ஊதிய விகித ஒப்பந்தம் நாளை கையெழுத்து

நெய்வேலி:

              என்எல்சி தொழிலாளர்களுக்கான புதிய ஊதியமாற்று வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இதுநாள் வரை புதிய ஊதிய விகிதம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை கிடைக்காமல் தொழிலாளர்கள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.

              இந்நிலையில் வியாழக்கிழமை, மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் புதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் கிடைக்கும் என்ற ஆவலில் தொழிலாளர்கள் உள்ளனர். என்எல்சி தொழிலாளர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய விகித அடிப்படையில் ஊதியம் வழங்கவேண்டும் என்று நிறுவனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

                  இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினருடன் நிர்வாகம் பலசுற்று பேச்சு நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து ஜூன் 31 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜூலை 5-ல் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

                             இருப்பினும், தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு, இறந்தோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, டெக்னிக்கல் சொசைட்டி குறித்து நிர்வாகத்தினருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சு நடத்திவந்தனர். இதனிடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு 2 மாதமாகியும் இதுவரை புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் சம்பளமும், நிலுவைத்தொகையும் கிடைக்காததால் தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். செப்டம்பர் மாதத்திலாவது புதிய சம்பளம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள் கூறுகையில், 

                       ""திங்கள்கிழமை நிறுவன நிர்வாகத்துறை இயக்குநர் தேர்வு நடைபெற்றதால் நிறுவனத் தலைவர் வெளியூர் செல்ல நேரிட்டது. புதன்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் வெளியூர் செல்வதால், வியாழக்கிழமை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறோம். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டால் செப்டம்பர் 2-ம் தேதி நிலுவைத்தொகையும், புதிய ஊதியமும் கிடைக்கும்'' என்றார் பெருமாள்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior