உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஆகஸ்ட் 25, 2010

என்.எல்.சி. புதிய ஊதிய விகித ஒப்பந்தம் நாளை கையெழுத்து

நெய்வேலி:

              என்எல்சி தொழிலாளர்களுக்கான புதிய ஊதியமாற்று வரைவு ஒப்பந்தம் கையெழுத்தாகியும் இதுநாள் வரை புதிய ஊதிய விகிதம் மற்றும் அதற்கான நிலுவைத் தொகை கிடைக்காமல் தொழிலாளர்கள் விரக்திக்கு ஆளாகியுள்ளனர்.

              இந்நிலையில் வியாழக்கிழமை, மண்டல தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் என்எல்சி நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது. ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் புதிய விகிதத்தின் அடிப்படையில் ஊதியம் கிடைக்கும் என்ற ஆவலில் தொழிலாளர்கள் உள்ளனர். என்எல்சி தொழிலாளர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய விகித அடிப்படையில் ஊதியம் வழங்கவேண்டும் என்று நிறுவனத் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

                  இதையடுத்து நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்டத் தொழிற்சங்கத்தினருடன் நிர்வாகம் பலசுற்று பேச்சு நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலைத் தொடர்ந்து ஜூன் 31 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து ஜூலை 5-ல் நிர்வாகத்துக்கும், தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. 

                             இருப்பினும், தொழிலாளர்களுக்கான பதவி உயர்வு, இறந்தோரின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு, டெக்னிக்கல் சொசைட்டி குறித்து நிர்வாகத்தினருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சு நடத்திவந்தனர். இதனிடையே புதிய ஊதியமாற்று ஒப்பந்தத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவும், மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளன. இருப்பினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு 2 மாதமாகியும் இதுவரை புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் சம்பளமும், நிலுவைத்தொகையும் கிடைக்காததால் தொழிலாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். செப்டம்பர் மாதத்திலாவது புதிய சம்பளம் கிடைக்குமா என்று எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக பாமக தொழிற்சங்கத் தலைவர் பெருமாள் கூறுகையில், 

                       ""திங்கள்கிழமை நிறுவன நிர்வாகத்துறை இயக்குநர் தேர்வு நடைபெற்றதால் நிறுவனத் தலைவர் வெளியூர் செல்ல நேரிட்டது. புதன்கிழமை மண்டல தொழிலாளர் நல ஆணையர் வெளியூர் செல்வதால், வியாழக்கிழமை சென்னையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புகிறோம். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டால் செப்டம்பர் 2-ம் தேதி நிலுவைத்தொகையும், புதிய ஊதியமும் கிடைக்கும்'' என்றார் பெருமாள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior