கடலூர்:
சுனாமியில் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதுக்குள்பட்ட 8 பேருக்கு, தலா ரூ.51 ஆயிரம் வீதம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் திங்கள்கிழமை வழங்கினார்.
பாரதப் பிரதமரின் தேசிய குழந்தைகள் நலஉதவித் திட்டத்தில் இத் தொகை வழங்கப்பட்டது. திங்கள்கிழமை நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இத் தொகை குழந்தைகள் பெயரில் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு, பாதுகாவலரையும் நியமனம் செய்து, வட்டித் தொகையில் இருந்து, 18 வயது நிறைவடையும் வரை பராமரிப்புத் தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டத்தில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 61 நபர்களுக்கு ஆட்சியர் வழங்கினார். மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக