உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 07, 2012

வடலூர் தைப்பூச விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி

கடலூர் :

      கடலூரில், தைப்பூச விழாவை முன்னிட்டு, ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை வரும் 15ம் தேதிக்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காந்தி சமுதாய நலப் பேரவை நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன் விடுத்துள்ள அறிக்கை:


           காந்தி சமுதாய நலப்பேரவை சார்பில் தைப்பூச விழாவை முன்னிட்டு வள்ளலாரின் போதனைகளை நினைவு கூறும் வகையில் வரும் 26ம் தேதி விழா நடத்தப்படுகிறது. அதன்படி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு "வடலூர் வள்ளலார்' என்ற தலைப்பில் ஒரு பக்க அளவில் கவிதைப் போட்டி நடக்கிறது. இதேப் போன்று வள்ளலாரின் கனவுகளை படமாக வரைவது குறித்த ஓவியப் போட்டி, "வள்ளலாரின் நற்சிந்தனைகள்' (அல்லது) "மரணமிலாப் பெருவாழ்வு' என்ற தலைப்பில் குறைந்தது 2 பக்க அளவில் கட்டுரைப் போட்டி நடக்கிறது.

        "வள்ளலாரும் மனித நேயமும்' தலைப்பில் வரும் 26ம் தேதி நடக்கும் பத்து நிமிட பேச்சுப் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் கடிதம் மூலம் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

மாணவ, மாணவிகள் தங்கள் படைப்புகளை வீட்டு முகவரியுடன் 
ராஜசேகரன், 
65/ஏ, கன்னிய கோவில் தெரு, 
மஞ்சக்குப்பம், 
கடலூர்-1 

என்ற முகவரிக்கு வரும் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Read more »

திங்கள், பிப்ரவரி 06, 2012

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் டான்செட் போட்டி தேர்வு பயிற்சி

விருத்தாசலம் : 

          விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் நெய்வேலி கவுஷிகா கல்வி அறக்கட்டளை சார்பில் டான்செட் போட்டி தேர்வு எழுதுவது குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
 
        கல்லூரி முதல்வர் கலாவதி தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் கவாஸ்கர், பேராசிரியர் சேதுராமன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் மனோன்மணி வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியன் டான்செட் போட்டி தேர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கி பயிற்சி அளித்தார்.
கணிதம், இயற்பியல், வேதியியல், வரலாறு உள்ளிட்ட துறை மாணவர்கள் பயிற்சி பெற்றனர். பேராசிரியர்கள் சுரேஷ்குமார், அப்துல்ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 








Read more »

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் படகுக்கு தீவைப்பு

 http://mmimages.mmnews.in/Articles/2012/Feb/0a15611f-7015-431d-ae1b-1392638d4282_S_secvpf.gif
 
கடலூர்:
 
 
         கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரமணி என்ற மீனவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வான்குருதி என்பவர் உள்பட 8 பேர் மீது தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.  
 
         இந்த நிலையில் வான்குருதியின் அண்ணன் மணி கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது படகை தேடினார். கடலூர் முதுநகர் குட்டியாண்டவர் கோவில் பகுதியில் அந்த படகு மற்றும் அதில் இருந்த மீன்பிடி வலைகள் எரிந்து கிடந்தன. மர்ம கும்பல் அந்த படகை கடத்தி சென்று தீ வைத்தது தெரியவந்தது. படகின் சேத மதிப்பு ரூ.5 லட்சம். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீரமணி கொலை தொடர்பான மணியின் படகுக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது வேறு காரணமா? என விசாரணை நடக்கிறது. படகுக்கு தீவைத்து எரித்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். மீனவர் படகு தீ வைக்கப்பட்டதால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior