உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 09, 2009

கடலூர் மாவட்டத்தில் 73 சதவீத ஓட்டுப்பதிவு நாளை வாக்கு எண்ணிக்கை

கடலூர்:

             தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடை தேர்தல் நேற்று நடைபெற்றது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் காலி யாக உள்ள பதவிகளுக்கு இடைதேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு தொடங் கிய ஓட்டு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல ஓட்டு சாவடிகளில் வாக் களார்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

                கடலூர் மாவட்டம் மங்களூர் யூனியன் 14-வது வார்டுக்கான தேர்தல் 71.6 சதவீதமும், 21-வது வார்டில் 70.4 சதவீதமும், பரங்கிப்பேட்டை யூனியன் சிலம்பிமங்கலம் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் 77 சத வீதமும், விருத்தாசலம் யூனியன் எருமனூர் பஞ்சா யத்து தலைவர் தேர்தலில் 85 சதவீதமும் ஓட்டுகள் பதி வானது.

                எம்.பரூர் பஞ்சாயத்து 3-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 52.7 சதவீதமும், புதூர் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 66.5 சதவீதமும், எம்.புளியங்குடி 1-வது வார்டில் 62.6 சதவீதமும், எம்.புளியங்குடி 2-வது வார்டில் 77.8 சதவீதமும், போத்திர மங்கலம் 3-வது வார்டில் 52.6 சதவீதமும் வாக்குகள் பதிவானது.

                 அண்ணாமலை நகர் பேரூராட்சி 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 93 சதவீதமும், லால்பேட்டை 3-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் 69 சதவீதமும், விருத்தாசலம் நகராட்சி 25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் 83.5 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

             கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ளாட்சியில் காலியான பதவிகளுக்கு நடைபெற்ற இடை தேர்தலில் சராசரியாக 73 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இடைத்தேர்தல் நடந்த அனைத்து வாக்கு சாவடி மையங்களின் வாக்குகளும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒரு சில மணி நேரங்களிலேயே முடிவுகள் தெரிந்து விடும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior