கடலூர்:
கடலூர் மாவட்ட அனைத்து வங்கிகள் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் நடைபெற்றது. தமிழக சுகாதாரதுறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த விழாவில் மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு கல்வி கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் கல்வி கடனுக்காக தேர்வு செய்யப்பட்ட 291 மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 20 லட்சம் கடன் தொகையை ப.சிதம்பரம் வழங்கினார். இதையடுத்து மாணவர்களுக்கான கடன் வழங்கும் முகாமில் அமைக்கப்பட்டு இருந்த இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி. வங்கி உள்ளிட்ட 25 வங்கி ஸ்டால்களில் கல்வி கடனுக்கான விண்ணப் பங்களை மாணவர்கள் கொடுத்தனர். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் கேட்டு மொத்தம் 10 ஆயிரத்து 404 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
இதில் 3571 மாணவர்களின் கடன் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.41 கோடியே 60 லட்சம் கடனுக்கான முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் விழாவில் மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது கடலூரில் நடந்த விழாவில்தான். மேலும் இங்குதான் கல்வி கடனுக்கு அதிக தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கே.எஸ். அழகிரி எம்.பி. தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக