உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

                கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இந்த தேர்வுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

               வி.ஏ.ஓ. பணியில் காலியாக உள்ள 1,576 இடங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான பின்னடைவு காலியிடங்கள் 1,077-க்கு கடந்த மாதம் 21-ல் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 20-ம் தேதி கடைசி நாள் என்பதால், கடந்த ஒரு வாரமாக விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

               சில ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுக்கு ஏழு லட்சம் பேர் வரை விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு தேர்வுக்கு இதுவரை 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். 10 லட்சத்தைத் தாண்டும்: கடைசி நாளில் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு நேரில் வரும் பலரும் அங்கேயே விண்ணப்பங்களை நிரப்பி அளிக்கின்றனர்.

                தேர்வாணைய அலுவலகத்துக்குள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லை. இதனால், அங்கு வந்த பலரும் சாலையிலேயே தங்களது வாகனங்களை நிறுத்திச் சென்றனர்.  இதனால், கிரீம்ஸ் சாலை பகுதியில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

                இதர மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தபால் நிலையங்கள் மூலமாக வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

10-ம் வகுப்பு வரையிலான பாடங்கள்:

                         வி.ஏ.ஓ. தேர்வுக்கு தயாராவது எளிது என அரசுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படித்தாலே போதும். அதிலிருந்துதான் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்படும்.

                     பொது அறிவுக் கேள்விகள் 100-ம், தமிழ் அல்லது ஆங்கில மொழிப் பாடத்தை அடிப்படையாகக் கொண்டு 100 கேள்விகளும் கேட்கப்படும். பொது அறிவுக் கேள்விகளுக்கு விடையளிக்க, தினமும் செய்தித்தாள்களை படித்தால் போதும் என்கின்றனர் அரசு அதிகாரிகள். வி.ஏ.ஓ. தேர்வுக்கு முதுகலை படித்தவர்கள் முதல் பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக, தொழிற்கல்வி படித்தவர்கள் அதிகளவில் விண்ணப்பித்து வருகின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior