உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

டிஜிட்டல் பேனர் கலாசாரம்: பன்னீர்செல்வம் வேதனை

கடலூர் :

                 கடலூர் மாவட்டத்தில் டிஜிட்டல் பேனர் கலாசாரம் அதிகரித்துள்ளது என அமைச்சர் பன்னீர் செல்வம் வேதனையுடன் பேசினார். கடலூர் தேவனாம்பட்டினம், துறைமுகம் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் போலீசாருக்கு குடியிருப்பு திறப்பு விழா நேற்று கடலூரில் நடந்தது. டி.ஐ.ஜி., மாசானமுத்து தலைமை தாங்கினார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் வரவேற்றார். எம்.எல்.ஏ., அய்யப்பன், சேர்மன் தங்கராசு முன் னிலை வகித்தனர். டி.ஆர்.ஓ., நடராஜன், டி. எஸ்.பி., மகேஸ்வரன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவில் கலெக்டர் சீத்தாராமன் பங்கேற்று பேசினார்.

அமைச்சர் பன்னீர்செல்வம் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசியது:

                 கடலூரில் போலீசாருக்கான குடியிருப்பை திறந்துவைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கடலூர் மாவட்டத் திற்கு எந்த போலீஸ் அதிகாரியும் வருவதற்கு விரும் புவதில்லை. அந்த அள விற்கு இங்கே பிரச்னைகள் இருந்தது. அப்படியே வந்தாலும் 6 மாதம் அல் லது ஓராண்டிலேயே சென்று விடுகின்றனர். இதனால் எஸ்.பி., யை தேடிப்பிடித்து அழைத்து வரவேண்டியிருந்தது.

                 மாவட்டத்தில் கடந்த ஏழு மாதத்தில் 201 பேர் இறந்துள்ளனர். விபத்துகளை தடுக்க சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி,சாலையை அகலப்படுத்தவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற் றும் நடவடிக்கைக்கும் பொதுமக்கள்மற்றும் அரசியல் வாதிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது டிஜிட்டல் பேனர் அதிகளவில் வைக் கும் கலாசாரம் ஏற்பட்டுள்ளது.

                              இதனால் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும் போக்குவரத்திற்கு இடையூராக இருக்கிறது. இதை தடுக்க எஸ்.பி., கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாளில் பேனர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். மக்கள் நலன் கருதி அனைத்து கட்சியினரும்,சமுகத்தினரும் போலீசாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனப் பேசினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior