உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 23, 2010

கடலூர் மாவட்டத்தில் தினமும் 2.52 லட்சம் மாணவர்களுக்கு வாரம் 5 நாள் முட்டை

கடலூர்:

                  கடலூர் மாவட்டத்தில் தினமும் 2.52 லட்சம் மாணவர்களுக்கு வாரம் 5 நாள் முட்டை வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 

                 சத்துணவுக் குழந்தைகளுக்கு வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம், கடலூர் மாவட்டத்தில் 20-9-2010 முதல் அமல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் செவ்வாய்க்கிழமை, கடலூர் ஒன்றியம் வழிசோதனைப்பாளையத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். வாரத்தில் 5 நாள்கள் முட்டை வழங்கும் திட்டம் அப்பள்ளியில் அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று சத்துணவு சாப்பிட்ட மாணவர்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

                    முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாள்களும் வாழைப்பழம் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை தோறும் மாணவர்களுக்கு கொண்டக்கடலை அல்லது பச்சைப்பயறு 20 கிராம் வழங்கப்படும், வெள்ளிக்கிழமைகளில் 20 கிராம் உருளைக்கிழங்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். இத் திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும், 2.52 லட்சம் மாணவ, மாணவியருக்கு முட்டை வழங்கப்படும் என்றும் ஆட்சியரின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior