கடலூர் :
தீபாவளியை முன்னிட்டு ஏழை நெசவாளர் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கைத்தறி துணிகளை பயன்படுத்தவேண்டும் என கலெக்டர் சீத்தாராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடலூர் முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் பங்கேற்று குத்து விளக்கை ஏற்றிவைத்து விற்பனையை துவக்கி வைத்தார். கடலூரைச் சேர்ந்த மார்தாமேரி பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நடராஜன், சிறப்பு அழைப்பாளர் பேராசிரியை ஜெயந்திரவிச்சந்திரன், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பூபதி, உற்பத்தி மேலாளர் ஜெயபால், மேலாளர் செங்குட்டுவன், தணிக்கை மேலாளர் ராமானுஜம், வடிவமைப்பு மேலாளர் வைரவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது:
கடந்தாண்டு கடலூர் மாவட்டத்தில் 2.79 கோடி ரூபாய் விற்பனையானது. இந்தாண்டு 3.46 கோடிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழை நெசவாளர் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் கைத்தறி மற்றும் காதி கிராம தொழில் வாரியம் உற்பத்தி செய்யும் துணிகளை வாங்கி பயன்பெறவேண்டும் என கேட்டுக் கொண்டார். தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரகங்களுக்கும் 20 முதல் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக